பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 நற்றிணை

சுளேகளே வேண்டுமட்டும் தின்றது ; தான் விரும்பாத பலாக் கொட்டைகளேக் கீழே உதிர்த்தது ; கொட்டை களால் மறைப்புண்டது அம்முன்றில் அவ்வளவு பேரழிவினை விளேத்துவிட்டு, அவளோ, அல்லது அம்மலே

வாழ் குறவரோ அறிந்துகொள்ள முன்பே, வாழும் இடத்திற்கு வந்துவிட்டது.

முன்றில் பலவின் படுசுளே மரீஇப் புன்தலை மந்தி துர்ப்பத் தங்தை மைபடு மால்வரை பாடினள் கொடிச்சி, ஐவன வெண்ணெல் குறுநூஉம்.” 1

குட்டிக்கு ஆவின் பாலூட்டும் குரங்கு :

ஒரு மந்தி, ஈன்றெடுத்த மகவோடும் தன் இனத்துப் பிற குரங்குகளோடும், எவரும் அஞ்சிக் கண்விழித்துக் கொள்ளுமாறு, பேரொலி எழுப்பிக் கொண்டே மலேச் சாரலே அடுத்த காட்டுவழியே போய்க்கொண்டிருந்தது. தன் கூட்டத்திற்குத் தலைமை தாங்கி முன்னே சென்று கொண்டிருந்த மந்தி, திடுமென நின்றது ; பின்புறம் திரும்பித் தன் கூட்டத்தைக் கூச்சல் இடாவாறும், மேற் கொண்டு நகராவாறும் கையால் சைகை செய்து, வாயடைத்து கிற்கச் செய்தது மந்தியின் செயலுக்குக் காரணம் அறியாது கலங்கிற்று அக்குரங்குக் கூட்டம்; மலைமேல், வேங்கை மரத்தின் நிழலில், காட்டுக் கொடு விலங்குகளுக்கு அஞ்சாது, அயர்ந்து உறங்கிக்கொண் டிருக்கும் வளைந்த வலிய கொம்புகளேக் கொண்ட ஒரு

காட்டுப் பசுவைக் கண்டது ; அது கன் lன்ற பசு ,

1. நற்றின: 378. கபிலர். - . படுசுளே-மிக்க சுளே. மரிஇ-உண்டு. தூர்ப்ப-கொட்டைகளால் தூர்ப்ப. மையடு - மேகம் தங்கும். பாடினள் - பாடிக்கொண்டே. கொடிச்சி - குறப்பெண். குறிாடம்-குற்றும்,