பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 நற்றிணை

உண்ணும் உணர்வு அதற்கு இல்லே. ஆனால் அதன் காதலியாகிய மந்தியோ சூழ்ச்சித்திறன் மிக்கது ; பசித் துயர் வருத்த வாடி கிற்கும் தன் காதலனேக் கூட்டிக் கொண்டு மலேச்சாரலுக்குச் சென்றது. ஆங்கு ஒர் தினேப் புனம் நன்கு விளந்து, கதிர் முற்றித் தலைசாய்ந்து கிடந்தது. அதைக் காத்திருந்தாள் ஒரு பெண் ; அவள் அறியாவாறு புனத்துள் புகுந்தது; தலைக் கதிர்களாகப் பார்த்துப் பறித்துக்கொண்டது கடுவனேயும் அழைத் துக் கொண்டு, அப்பெண் ஏறித்துரத்திவருதற்கியலாத வாறு மலையுச்சியை அடைந்தது : ஒரிடத்தே எதிரெதிராக அமர்ந்தன. இரண்டும் ; கதிர்களேக் கைகளால் நிமிண்டி, பதர் போக ஊதி, வாயிலிட்டு உண்ணத் தொடங்கின.; உண்ணத் தொடங்கியதும் வானத்தில் மேகம் கருத்துக் திரண்டது , மழை வந்து விடுமோ எனும் அச்ச மிகுதியால் தினயை மென்று தின்ன மாட்டாது, அனேத் தையும் வாயிலிட்டுத் திணித்தன. உணவு, வாய்நிறைந்து விட்டமையால், இரு தாடைகளும் வீங்கின. அதற் குள்ளாகவே மழையும் வந்து விட்டது பறித்துக் கொணர்ந்த கதிர்களேப் பாழாக்கி விடுதல் கூடாதே என்ற எண்ண மிகுதியால், மழை நீர், மேனியை கனப் பவும், இடம் விட்டுப் பெயராமல், உண். ற்றாெழிலேத் . தொட ர்ந்து மேற்கொண்டிருந்தன. மழை மேனியை நனப்ப உண்டிருக்கும் அக்குரங்குகளின் தோற்றம், தைந்நோன்பு நோற்கும் பெரியோர், நீராடி, ரோடிய ஈரம் புலரா முன்பே, உணவுண்ணும் காட்சியை நினைவூட்டு வதாய் இருந்தது. x - - - .

கொடிச்சி காக்கும் அடுக்கல் பைந்தினை முந்துவிள பெருங் குரல் கொண்ட மந்தி கல்லாக் கடுவைெடு கல்வரை ஏறி s அங்கை நிறைய ஞெமிடிக்கொண்டு தன்