பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 நற்றிணை

பழகி அறியாத அம்மூக்கினின்றும் தும்மல்கள் தோன்ற லாயின : தும்மல் மிகுதியால் துயர் உற்றது மந்தி. புலால் உணவின் மணத்தையும் வெறுக்கும் மந்தியின் ஒழுக்க மாண்பினேப் போற்றுவோமாக.

கொழுஞ்சுளேப் பலவின் பயங்கெழு கவா அன் செழுங்கோள் வாங்கிய மாச்சினைக் கொக்கின் மீன்குடை நாற்றம் தாங்கல் செல்லாது துய்த்தலே மங்தி தும்மும் நாடு.” 1

காதல் நெறி உணர்ந்த மந்தி :

கரிய விரல்களேயும் சிவந்த முகத்தையும் உடைய குரங்களின் பெரிய கூட்டத்தைத் தன் சுற்றமாகக் கொண்டு வாழ்கிறது ஒரு பெண் குரங்கு. பெரிய சுற்றத் தைப் பேணிப்புரக்கும் பொறுப்பின் மிகுதியால் அது, தன் காதலனேடு ஆடிப்பாடி மகிழும் காதல் வாழ்வைக் கைவிட விரும்புவதில்லை. தன்னேப் பின் தொடர்ந்து வாழும் அப்பெருங் கூட்டத்திற்குத் தேவையான உணவு களேத் தேடி அளித்த பின்னர், அது, தன் காதலைேடு தனியிடம் நாடிச் செல்லும் ; சென்று, மலையை அடுத் துள்ள சாரலில் பாய்ந்தோடும் அருவி நீரில் புகுந்து ஆடும் : பின்னர்க்கரை ஏறி, ஆங்கு வளர்ந்திருக்கும் வளைந்த மூங்கில்மீது, கடுவனேடிருந்து ஊசலாடி மகிழும் ; ஆடல்பாடல்களால், மனம் மகிழ்ச்சியால் நிறைந்திருக்கும் அந்நிலையில், அம்மலையில், பிற உயிரினங்கள் எதுவும் புகுதலறியாத மறைவிடத்தே உள்ள சுனேக்கரையில் வளர்ந்திருக்கும் வேங்கை மரத்தின்மீது ஏறித் தம்

o 1. : 326. மருதன் இளநாகனர். -——

கொழுஞ்சுன்-பருத்த சுளே. கவான்-மலேச்சாரல், செழுங்கோள். பழங்கள் நிறையப் பழுத்தமையால் வாங்கிய-வளைந்த, மாச்சினைபெரிய கிளே. துய்த்தல-பஞ்சுபோன்ற மெத்தென்ற தலை,