பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 நற்றிணை

பிறர் எவரும் எளிதிற் புகமாட்டா மறைவிடத்தே சென்று புணர்ந்தது. புணர்ந்த பின்னர், தாம் புணர்ந்ததை, அவ்வினக் குரங்குகள் கண்டில வேனும் புணர்ச்சியால், தன் உடல்பெற்றிருக்கும் வேறு பாட்டினைக் காணகேரின், தாம் புணர்ந்ததை அவை உணர்ந்துவிடும்; அவ்வுணர்ச்சி யாலும் தன் நாண்கெடும் என உணர்ந்தது ; அதனல், அப்புணர்ச்சியால், தன் மெய்யில் யாதேனும் வேறுபாடு உண்டாயிருப்பின், அதையும் போக்கி விடுதல் வேண்டும் என விரும்பிற்று. உடனே, சுனேயருகே கிற்கும் வேங்கைமீது ஏறிற்று ; சுனே நீரிற் படுமாறு மிகத் தாழ்ந் திருக்கும் அதன் கிளேமீது மெல்லச் சென்றது. சென்று, ஆடாது அசைவற்றுத் தெளிந்து நிற்கும் சுனேநீரில் தலை சாய்த்துத் தன் உருவைக் கண்டது ; புணர்ச்சியால் தன் தலைமயிர் சிறிதே கலேந்து கிடப்பதைக் கண்டது. உடனே தன் இரு கைகளாலும் தலைமயிரைக் கோதி, பண்டே போல் படிய வைத்துக்கொண்டு வெளிப் போந்து தன் இனத்தோடு கலந்துகொண்டது. மந்திக் காதலின் மாண்புதான் என்னே இங்கிலேயில், அது மக்களினும் மாண்புடைய தாமன்றாே ? கடுவன், முறிஆர் பெருங்கிளே அறிதல் அஞ்சிக் கறிவளர் அடுக்கத்துக் களவினிற் புணர்ந்த

செம்முக மந்தி செல்குறி, கருங்கால் பொன்னினர் வேங்கைப் பூஞ்சினைச் செலீஇயர் குண்டுநீர் நெடுஞ்சினை நோக்கிக் கவிழ்ந்து தன் புன்தலைப்பாறுமயிர் திருத்தும்.” 1 -

1. 58:57:1. 51, இளாகஞர். r - முறிஆர்-தளிர்களத் இன்னும். கறி-மிளகுக்கொடிகள். செல்குறி. புணர்ச்சியால் நிகழ்ந்த மெய்வேறுபாடு. இணர்-பூங்கொத்து. பூஞ்சின்அழகியகிள. சென் இயர்-சென்று. குண்டு ர்ே-ஆழமான ர்ே. புன்தலே.

மெல்லியதல. பறுமயிர்-கலந்த மயிர்.