பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5


மலே நிலம்

மேகத்துள் மறையும் மந்தி :

பழகப் பழகப் பாலும் புளிக்கும் அதைப்போலவே காதலனேக் கணப்பொழுதும் பிரியாது வாழின், அக்காத லும் கசந்துவிடும்; காதலனுக்குத் தன்பால் வெறுப்புண் டாதலும் கூடும் ; அதனுல் இடையிடையே, ஒருவரை யொருவர் பிரிந்து வாழ்தல் காதல் வளர்ச்சிக்கு இன்றி யமையாதது. அப்பிரிவு அவர் காதலே வளர்க்கும்; அதை உறுதி வாய்ந்ததாக்க உறுதுணே புரியும் ; காதலின் இவ்வுண்மையினே அறிந்திருந்தது ஒரு மந்தி. அது சில காலம் கடுவனுேடு காதல் விளேயாட்டு மேற்கொண்டு வாழ்ந்தது. ஒரு குட்டியும் பிறந்தது. அதல்ை, கடுவ லுக்குத் தன்மீது காதல் குறைந்துவிடுமோ என அஞ் சிற்று மந்தி. காதற் சிறப்பினே அறியும் அறிவு கடுவ லுக்கில்லே ; அதனாலேயே, மக்தி அவ்வாறு அஞ்சிற்று : அஞ்சிய மந்தி, அவ்வாறு நேர்ந்து விடாவாறு, தன் காதலே கின்று வளர்க்கத் துணிந்தது. உடனே, குட்டியை மார்போடு அணேத்துக் கொண்டே, கடுவன் அறியாவாறு மலேயுச்சியை அடைந்தது. மலேயில் படிந்து கிடக்கும் மேகத்திடையே புகுந்து மறைந்து கொண்டது. நாழிகை சில கழிக்தன; தன்னுேடிருந்த தன் காதலியையும், குட்டியையும் காணுத கடுவன் கலங்கிற்று அவற்றைக் காண வேண்டும் அவற்றை எவ்வாறேனும் அடைய வேண்டும்; மக்தியோடு மகிழ்ந்து ஆடியும், குட்டியின் குறும்புச் செயல்களேக் கண்டும் களிகூர வேண்டும் எனும் வேட்கை அளவிறந்தது; அவ்வார்வ மிகுதியால், அங்கும் இங்கும் தேடி அலேந்தது; அலேயும் கடுவனின் அன்பினக் கண்டுகொண்டமந்தி, மேலும், மறைந்து வாழ்தல் முறை யாகாது என உணர்ந்து, மேகத்தின் நீங்கி, மெல்ல மெல்ல வெளிப் போந்து, கடுவன் மகிழுமாறு கலந்து கொண்டது; “ ஊடுதல் காமத்திற்கின்பம்’ எனும்