பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



மலை நிலம் 57

'சிறுகண் பன்றிப் பெருஞ்சின ஒருத்தல்
துறுகண் கண்ணிக் கானவர் உழுத
குலவுக்குரல் ஏனல் மாங்தி ஞாங்கர்,
விடர்அளைப் பள்ளி வேங்கை அஞ்சாது
கழைவளர் சாரல் துஞ்சும், 1

பல்லி சொல் அஞ்சும் பன்றி :

தினேக்கதிர்களைத் தின்னும் ஆர்வமிகுதியால், புலிக்கு அஞ்சாது போகும் பன்றி, போகும் இடத்தில் தன் உயிருக்குக் கேடு உண்டாம் என்பதை அறிந்துவிடின் உடனே அச்சம் பிடர்பிடித்து உந்த, பின்னோக்கி ஓடி, மலைக்குகையைத் தேடி அடைந்து அடங்கிவிடும். ஒரு நாள் ஒரு பன்றி தினப்புனம் ஒன்றை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. முள்ளம் பன்றியின் முட்கள் போன்ற பருத்துத் திரண்ட மயிர்கள் கழுத்தை அழகு செய்ய தினக்கதிர்களைத் தின்னும் ஆர்வம் அகத்தே எழ, அதன் கூரிய சிறிய கண்கள் தினேப் புனம் உள்ள இடத்தைத் தேடிக் காண, விரைந்து சென்று கொண்டிருந்தது. இடை வ்ழியில், நுழைந்து நுழைந்து செல்வதல்லது எளிதிற் செல்லலாகா ஓர் இடத்தே, பன்றிகளால் தம் புனம் பாழாவதைப் பொருத கானவர், அப்பன்றிகளே அகப்படுத்தவல்ல பொறிகளே அமைத்திருந்தனர். அவற்றைக் கண்டு விட்டது அப்பன்றி : ஆயினும் அஞ்ச வில்லை தினேக்கதிர் பால் கொண்ட ஆசையும், எதையும் அழித்தொழிக்கவல்ல ஆற்றலுடைமையால் தோன்றிய அஞ்சாமையும் பொறிகளைப் பொருட்படுத்தாதே புகுந்து செல்லத் தூண்டின. பன்றியும் பொறியை அணுகி


1. நற்றிணை : 386, தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார்.

ஒருத்தல்-ஆண்பன்றி. குலவுக்குரல் - முற்றினமையால் வளைந்த கதிர்கள். ஏனல்-தினை. மாந்தி-உண்டு. ஞாங்கர்-அண்மையில். விடர் அளைப்பள்ளி-மலைக்குகையை வாழிடமாகக் கொண்ட கழை-மூங்கில்.