பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 நற்றிணை

நுழையத் தொடங்கிவிட்டது ; அக் கிலேயில், ஆங்கிருந்த பல்லி ஒன்று ஒலித்தது ; பல்லி சொல்லின் பலன் அறிந்தது போலும் அப் பன்றி அஃது ஒலித்த முறையும், இருந்து ஒலித்த இடமும், எதிர்காலத்தே, செல்லும் இடத்தே தனக்குண்டாம் கேட்டினே உணர்த்து வதாக உணர்ந்தது. அங்கிலேயே, அச்சம் அதை ஆட் கொண்டுவிட்டது; அவ்விடத்தை விட்டு விரைந்து ஒடிற்று மலேச் சாரலில், காப்புமிக்க குகையொன்றைத் தேடிக் கண்டு உட்புகுந்து அடங்கி விட்டது. ‘ எய்ம்முள் அன்ன பரூஉமயிர் எருத்தின்,

செய்ய்ம்ம் மேவல் சிறுகண் பன்றி ஓங்குமலை வியன்புனம் படி இயர், வீங்குபொறி நூழை நுழையும் பொழுதில், தாழாது பாங்கர்ப் பக்கத்துப் பல்லி பட்டென மெல்ல மெல்லப் பிறக்கே பெயர்ந்து, தன் கல் அளேப் பள்ளி வதியும்.” 1

இசைப் பறவை அசுணம்

இசைக்கு உருகாத உயிர்களே இல்லை : வழிப் போவாரை வருத்தி உயிர்கொண்டு, அவர் கைப் பொருள் கவர்ந்து வாழும் கொடியோரையும் கல்லோ ராக்கும் ஆற்றல் இசைக்கு உண்டு. இசை கேட்டு உருகாத உள்ளம், உயர்ந்த, உயிருடைய உள்ளமாகாது. இப்பண்பு - மக்களுக்கு மட்டும் பொருந்துவதாகாது ; ஓரறிவுயிர் முதலா அனைத்துயிர்க்கும், இது பொருந்தும், பறவைகள் SuS

எய்-முள்ளம்பன்றி. பருஉமயிர்-பருத்த மயிர் செய்ய்ம்ம்-செய் என் பதன் அளபெடை, திணைப்புனம் என்பது பொருள். மேவல்-விருப்பம். படிஇயர்-அடைதற் பொருட்டு. வீங்கு-பெரிய பொறி-lன்றியை அகப் படுத்தும் பொறி. நூழை-நுழைந்து செல்லவல்ல இட்டுவழி. தாழாது. - விரைந்து. பாங்கர் பக்கம்-நல்ல பக்கம். பட்டென-ஒலிக்க. பிறக்கு.பின் . புறம். : . . . .” * : ...,’ ‘. . ; - ... .”,