பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலே நிலம் 59

அனைத்துமே இசைக்கு இரங்கும் என்றலும் அவம் ஆறுள்ளும் அசுணம் எனும் பறவைக்கு வாய்த்துள்ள இசைநுகர் அறிவு, மக்களுக்கும் வாய்த்தற்கரிய மாண் புடையதாகும். இனிய இசைகளே இன்புற்றுக் கேட்கும் இயல்புடையது அப்பறவை. தேன் உண்ணும் வண்டுகள், தேன்தேடித் திரியுங்கர்ல் எழுப்பும் ஒலி, காதிற்கினிய ஒலி யாதலே உணர்ந்த அசுணம், அவ்வொலியை இனிய யாழ் ஒலியாகக் கருதி மகிழும்; அதல்ை, அவ்வண்டொலி யாண்டு எழினும், கூரிய தன் காதுகளால் கூர்ந்து கேட்கும் இயல்புடையது.

‘ மாதர் வண்டின் கயவரும் தீங்குரல்

மனம் காறு சிலம்பின் அசுணம் ஒர்க்கும்.” 1 இசையின் பத்தில் ஆழ்ந்து போவது அனைத்

துயிர்க்கும் உண்டேனும், ஏனய உயிர்களுக்கில்லாத் தனிச் சிறப்பு அசுணத்திற்கு உண்டு இனிய இசை கேட்கும் ஏனேய உயிர்களின் காதுகள், இன்னுத ஒலிகளேக் கேட்க மறுத்துவிடுவதில்லை : அவ்வொலியைக் கேட்க அவை விரும்புவதில்லை எனினும், அவ்வொலி அவற்றின் காதுகளிற் புகுவதும், அவற்றைக் கேட்கும் அவ்வுயிர்கள் இறந்து போகாது. உயிர் வாழ்வதும் உலகியல் , ஆனல் அசுணத்தின் இயல்பு முற்றிலும் மாறுபடும். இனிய இசை கேட்டு மகிழும் அசுணம், இன்னத ஒலியினக் கேட்க கேரிடின், உயிர் வாழாது அவ்வின்ன ஒலிக்காக் கேட்டு உணர்வற்றுப் போகாதிருத்தல், அசுணத்தின் காதுகட்கு இயலாது; இனிய இசைதுகரும் அக்காதுகள், இன்ன ஒலி தம்முள் புகுந்தவுடனே, உணர்வற்றுப் போகும் , அசுணம் உயிரிழந்து போகும்.

1. நற்றிணை : 244. கூற்றங்குமரஞர். - மாதர்-அழகு. கயவரும்-விருப்பம் மிக்க, சிலம்பு-மலே. ஒர்க்கும். கூர்ந்து கேட்கும். -