பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 நற்றிணை

அசுணத்தின் இவ்வியல்புணர்ந்த வேட்டுவர், அதனே இசை நுகர் ஆர்வத்தைக் கொண்டே கைப்பற்றிக் கொல்வர். அவ்வேட்டுவர். அப்பறவையிருக்கும் இடம் தேடிச் சென்று, அது கேட்குமாறு, முதற்கண், யாழ் குழல் போலும் இனிய இசைகளே எழுப்புவர். அது, அவ்விசை கேட்டு மகிழ்ந்து மயங்கியிருக்குங்கால், திடுமென, அவ்வினிய இசையினே விடுத்து, பறைபோலும் இன்ன இசை தரும் கருவிகளே அடித்துப் பேரொலி எழுப் புவர். இனிய இசை கேட்டு இன்புற்றிருந்த அசுணம், அவ்வின்ன ஒலியினே க் கேட்டதுமே சிங்தை கொந்து செயலற்று வீழ்ந்துவிடும் வேட்டுவரும் அதைக் கைப் பற்றிக் கொள்வர். இனிய இசை எழுப்பி, அசுணத்தின் உள்ளத்திற்கு உவகை ஊட்டிய அக்கானவர் கைவிரல் களே, அவ்வசுணத்தின் உயிர்போக்கும் இன்னு ஒலி யையும் எழுப்புவதறிந்து வருந்தினர் ஒரு புலவர், இனிய இசையால் மகிழ்ந்து, இன்ன இசையால் மாளும் அசுணத்தின் இசைநுகர் அறிவினப் பாராட்டாதாரும் உளரோ ? - அசுணம் கொல்பவர் கைபோல் கன்றும் இன்பமும் துன்பமும் உடைத்து.” 1

மலவாழ் மக்கள் :

தமிழகத்து மலேகிலங்கள் இயற்கைச் செல்வங்களே நிறையக் கொண்டிருந்தன. அம்மலைநாட்டு மக்களின் உடலுக்கு உரம் ஊட்டும் காய் கனி கிழங்கு முதலாம் உணவுப்பொருள்களேயும், அவர் வாழ்க்கைக்கு வனப் பூட்டும் அகில், ஆரம், தேக்கு, வேங்கை முதலாம் ” வகைகளையும், புலித்தோல், யானேக்கோடு முதலாம் விலங்குச் செல்வங்களேயும் வேண்டுமளவு பெற்றிருந்தன.

1. 15: 304. மாருேக்கத்து f