பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலே நிலம் 64

அங்கிலங்கள். என்றாலும், உழைப்பின் பயன் அறிந்த, உழைத்து வாழும் வாழ்வின் உயர்வறிந்த அம்மலோட்டு மக்கள், உழைக்காதே பெறலாகும் அவ்வியற்கைச் செல்வங்களோடு அமையாது, உழைத்துப் பொருள் பெற்று வாழ்ந்தனர். உழைத்து வாழக்கருதிய அவர்கள், ! தொழில்களுள் உழவுத்தொழிலே உயர்வுடையது உண வளித்து உயிர்புரக்கும் சிறப்புடையது என அறிந்தனர். மலேச்சாரலில் மேடு பள்ளங்கள் மிகுதியாக இல்லாத இடங்களைத் தேடிக் கண்டனர் ; ஆங்குளள மரம் செடி கொடிகளே அழித்தனர் ; சிறு சிறு கொல்லேகளாக வளேத்து வரப்பிட்டனர் ; மழை பெய்யும் பருவகிலே அறிந்து, கிலத்தை நன்கு உழுதனர் ; அங்கிலத்தில் விளேயத்தக்கது தினேயே என அறிந்தனர் ; விதைக்கும் விதைகளே நெருங்க விதைப்பின் விழுமிய பயன்தராது என அறிந்த அவர்கள், சில விதைகளே அகல விதைத் தனர் ; அவர்கள் எதிர்நோக்கியவாறே, தினேயும் ஒன்று - பலவாகக் கிளேத்து வளர்ந்தது ; பெரும் பெரும் கதிர்களே ஈன்றது. ஈன்ற கதிர்கள் முற்றிக் கனத்தமையால், கிமிர்ந்து நிற்கமாட்டாது தலை சாய்ந்தன ; கதிர்க்காட்சி யைக் கண்டு மகிழ்ந்தனர் கானவர்.

மலே இடம் படுத்துக் கோட்டிய கொல்லைத் தளிபதம் பெற்ற கான் உழு குறவர், சிலவித்து அகலவிட்டு உடன்பல விளங்து இறங்கு குரல் பிறங்கிய ஏனல்.” 1

. நற்றின் 209, கொச்சிநியமங்கிறார். “. . . . . . . . இடம்டுத்து-அகலப்படுத்தி. கோட்டி-வேலியிட்டு வளைத்து. தளி

பதம்-மழைபெய்து பெற்றபதம். கான்-காட்டை. அகலவிட்டு-பரவலாக

விதைத்து. இறங்கு-விளைந்து சாய்ந்த, குரல்-கதிர். பிறங்கிய-விளங்கிய

ஏனல்-தினைப்புனம்,