பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 நற்றிணை

களிறு விரட்டிக் காவல் புரியும் கானவர் :

நீரினும் நன்று அதன் காப்பு என்றார் வள்ளுவர். ஒன்றை விதைத்து அதனுலாம் பயனேப்பெற எண்ணு வார்க்குப் பேருழைப்பும் பலநாளும் வேண்டும் ; ஆணுல், விளங்த ஒருபொருளே அழிக்கக் கருதுவார்க்கு ஒரு காழி கையே சாலும் ; ஆகவே உழு தொழில் புரிவார், விளந்த தம் பயிரை விழிப்பாயிருந்து காக்கக் கடமைப்பட்டவ ராவர். இரவும் பகலும் அகலாதிருந்து காத்தல் வேண்டும்; அவ்வாறு காத்துக் கிடப்பார்க்கே பயன்கிட்டும்; விளேயும் பயிருக்குக் கேடுபுரிவன பலப்பல. காட்டு விலங்குகளால் உண்டாம் கேடு, அவை எல்லாவற்றிலும் அதிகமாகும். ஆகவே, அவ்விலங்குகள் வந்து அணுகாவாறு, வரின் விரைந்து ஒட்டிக் காக்கவல்லாரை நிறுத்திக் காத்தல் வேண்டும். உழவுத் தொழிலின் இவ்வுண்மையினே உணர்ந்திருந்தனர் அக்காலக் கானவர்.

கானவர் விளேக்கும் தினேப் பயிருக்கு, அது கதிர் முற்றி இருக்கும் காலத்தே, கேடு தருவனவற்றுள் களிறுகள் சிறந்தனவாம. அதனல், அக்களிறுகளை அடித்துத் துரத்தவல்ல படைகளோடு பார்த்திருப்பர் அக்கானவர். களிறு ஒன்று தம் புனத்தில் பகம் காலத்தே புகுந்துவிட்டது என்பதை அறியின், உடனே அச்சேரிவாழ் கானவர் அனைவரும் ஒன்றுகூடி ஒ எனும் இரைச்சல் எழுப்பிக் கொண்டே ஓடி, அக்களிறு கேட்டதுமே அஞ்சி ஒடவல்ல பறைகளே முழக்குவர் முதற்கண் : அப் பறையொலி கேட்டு அது அஞ்சி அகலாதாயின், வில் வளத்து அம்பேவி விரட்டுவர் ; அம்பேறுண்டும் அகலாதாயின் அதன் உடலில் ஆழப்

புகுந்து உயிரைப் போக்கவல்ல விசையோடு சென்று. பாயுமாறு கவண் கற்களே வீசி விரட்டுவர்.