பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64. நற்றிணை

வாலா வேழம் வணர்குரல் கவர்தலின் கானவன் எறிந்த கடுஞ்செலல் ஞெகிழி வேய்பயில் அடுக்கம் சுடர மின்னி நிலகிளர் மின்னின் தோன்றும்.” 1

வானிலை அறியும் கானவர் :

விளேயும் பயிருக்கு விட்டில்களாலும் விலங்குகளாலும் விளேயும் கேட்டினும், காற்றாலும் மழையாலும் விளேயும் கேடு பெரிது. முன்னவற்றால் விளையும் கேட்டினே முன் கூட்டியே அறிந்து போக்குதல் ஒருவாறு இயலும். ஆல்ை, பின்னர்க் கூறிய இயற்கைகளால் உளவாகும் கேட்டினே, அவ்வாறு அறிந்து போக்குதல் அரிது. அதல்ை உழுது பயன் விளக்கும் கானவர், கதிர் முற்றி யிருக்கும் தம் தினேப்புனம், காற்றாலோ, மழையாலோ கெட்டுப் போகாவாறு விழிப்பாயிருந்து காத்து, காலநிலை அறிந்து கதிர் கொய்து பயன்கொள்வர். மழையால் கதிர்கள் மடிந்துவிடும் என்பதை அறிவராதலின், அம் மழை எப்பொழுது வந்துவிடுமோ எனும் அச்சத்த்ால், அதன் வருகையை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் ஆர்வமுடையவராய் இருப்பர் எப்பொழுதும் வான நிலையினேயே நோக்கிக் கிடப்பர் ; வான்கில, பகற்கால மாயின் பார்த்தற்கு இயலும் ; இரவுக் காலத்தே, மேகங் களின் இயக்கத்தை அறிதல் இயலாது என்றாலும், அவ்விராக்காலத்தும், அதைக் காணும் ஆர்வம் துடிக்க விழித்திருந்து வானத்தையே நோக்கியிருப்பர் , தம் மனேயின் முன்புறத்தே வீற்றிருக்கும் அவர்கள், ஆங்கு வளர்ந்து, வானுற உயர்ந்திருக்கும் ஆசினிப் பலாவின் 1. நற்றின: 393. கோவூர்கிழார். 3. - வாலா-கரிய. வணக்குரல்வளைந்த தினக்கதிர். கடும்செலல்-விரைந்து செல்லும் ஞெகிழி-எரிகொள்ளி, தீப்பந்தம், வேய் பயில்-மூங்கில் வளர்ந்த, அடுக்கம்-மலச்சாரல், நிலகிளர்-சிறிது பொழுதும் கிலேபெறுதல் இல்லாத