பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலை நிலம் 65

உச்சியில், ஒன்றுகூடி மொய்க்கும் மின்மினிப் பூச்சிகள் காட்டும் ஒளித்துணை கொண்டேனும், மேகத்தின் இயக் கத்தைக் காணத் துடிக்கும் அவர்கள் உள்ளம். அவ் வாறே, அவற்றின் துணையாலும் வானிலை அறிந்து வாழ்ந்தனர் அக்கானவர். - - -

நீடிலே விளேதினைக் கொடுங்கால் நிமிரக் கொழுங்குரல் கோடல் கண்ணிச், செழும்பல பல் கிளேக்குறவர், அல்கு அயர் முன்றில் குடக்காய் ஆசினிப் படப்பை நீடிய பன்மர உயர்சினை மின்மினி விளக்கத்துச் சென்மழை இயக்கம் காணும்,’ 1 கானவர், தம் புனத்தில் கொய்து கொணர்ந்த கதிர் களேத் தம்மனேயின் முன்புறத்தே உள்ள பாறைமீது உலர்த்திக் காவல் புரிவர். காவல் புரிவார்க்கு, அக்கதிர் களேக் கிளியும் கோழியும், களிறும் பன்றியும் கவர்ந்து போகாவாறு காத்தல் மட்டுமே கடமையாக 1 தில்லை. காற்று மழைகளால் அவை கெட்டுப் போகாவாறு காத்தலும் கடமையாகும் இக் கருத் துடைய கானவர் சிலர், தம் கதிர்களேக் காத்திருந்தனர். அப்பொழுது, திடுமெனக் கேட்டது, இடியொலித்தாம் போலும் ஒரு பேரொலி காட்டில், தன்னைப் பகைத்த யானையைக் கொன்று வீழ்த்திய புலி, அவ்வெற்றிக் களிப்பால், மலேயும் காடும், ஒருங்கே அதிருமாறு பேரொலி செய்தது. அவ் வொலியையே கானவர் கேட்டனர்; ஆனல் மழை வந்து கதிர்களைப் பாழாக்கி

1. நற்றிணை : 44. பெருங்கெளசிகளுர்,

கொடுங்கால்-கதிரைத் தாங்கமாட்டாது வளைந்ததாள் கொழுங் குரல்-பருத்த கதிர்கள். கோடல்கண்ணி-கொய்தல்கருதி, அல்கு அயர்தங்கி மகிழும். குடக்காய் ஆசினி-குடம்போலும் காயை உடைய ஆசினிப் பலா பட்ப்பை-தோட்டம், ! - - * . . . . ‘. .