பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 கற்றிணை

விடுமோ எனும் அச்சம், உள்ளத்தை இடைவிடாது உறுத்திக் கொண்டிருக்கக் காத்திருந்தனராதலின், அவர்கள் உள்ளம், எப்பொழுதும், அம்மழையையே கினேங் திருந்தது. அதல்ை, புலி ஒலி, மழையின் இடியொலி போல் அவர் காதுகளிற் பட்டது ; அதல்ை, மழைதரு மேகங்கள் எழுவதைக், கண்களால் கண்டிலரேனும், மேகம் இடிப்பதாகவே கருதினர் ; விரைவில் மழைவருதல் உறுதி என எண்ணினர் ; அக்கிலேயே, முன்றிலிற் காய்ந்து கிடக்கும் கதிர்களே ஒன்று திரட்டவிரைந்தனர்.

‘ பெருங்கல் விடரகம் சிலம்ப, இரும்புலி

களிறு தொலைத்து உரறும் கடியிடி, மழை செத்துச் செங்தினை உணங்கல் தொகுக்கும், 1

கொன்று உயிர்வாழும் குறவர் :

உழுது உயிர் வாழ்ந்த கானவர், தம் உழுதொழிற்கு ஊறுதந்த விலங்குகளே வேட்டையாடிக் கொன்றனர்"; பின்னர் நாள் ஆக ஆக, வேட்டையாடிக் கொன்ற விலங்குகளுள் சில உண்டற்கு உரியவாம் இனிய உண. வாகிப் பயனளிப்பனவும் சில உள என அறிந்தனர். மேலும் சில காலம் செல்ல, தினப்புனத்திற்குக் கேடு தரும் விலங்குகளேயல்லாமல், வேறு சில விலங்குகளும் உள உணவாகிப் பயன்தருதற்கு அவையும் உரிய என உணர்ந்தனர். காய் கனி கிழங்குகளேயே உண்டு வாழ்ந்த அவர்கள், ஊன் உணவையும் உவந்து உண்ணத் தலைப் பட்டனர். அதல்ை வேட்டையாடல் தொழில் அவர் களின் இன்றியமையாத் தொழிலாயிற்று ; வேட்டம்

1. நற்றிணை 344 ம்துரை அறுவைவாணிகன் இளவேட்டனர். பெருங் கல்-பெரிய மலே விடரகம்-மலப் பிளப்புக்கள். சிலம்பஎதிரொலிக்க, இரும் புலி-பெரிய புலி உரறும்-முழங்கும். மழைசெத்துமழைக்குரல் என்று கருதி. செந்தின் உணங்கல்-காயப்போட்ட தினக்கதிர்.