பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலே நிலம் 67

புரிதலில் வல்லராயினர் கானவர். காட்டில் வளர்ந்து வானுற உயர்ந்து வளந்து கொடுக்கும் மூங்கில், வில்லாகப் பயன் தந்தது. வேட்டைப் பயனே விரும்பி எதிர் நோக்குவாராயினர் அக்கானவன் குடும்பத்தார். கானவன் ஒருவன், வில்லேந்தி வேட்டம் புரியவல்ல கைவன்மை பெற்றிருந்தான். கொடிய வில்லும் வலிய கண்யும் அவன்பால் இருந்தன. ஒரு நாள் வேட்டை மேற்கொண்டு காட்டுட் புகுந்தான். அவன் கண் னெதிர்ப்பட்டது ஒரு முட்பன்றி ; உடனே வில்லை கானே ம்றி விரைந்து எய்தான் ஒரு கணேயை ; அது சென்று அப் பன்றியின் கெஞ்சிற் பாய்ந்தது. இறந்து வீழ்ந்தது பன்றி ; வெற்றி கண்டு அவன் உள்ளம் உவகையால் துள்ளிற்று ; அம் மகிழ்ச்சியோடு கொன்ற பன்றியையும் உடன்கொண்டு தன்மனே நோக்கி நடக் தான். காட்டின் நடுவே கால்களே நாட்டிக் கட்டிய குடிசை யில் வாழும் அவன் மனேவியும் மக்களும், அவனேயும் அவன் வேட்டைப் பொருளையும் விரும்பி வரவேற்றனர். வேட்டை காய்கள் மகிழ்ச்சி மிகுதியால் அவனேச் சூழ வந்து வால்குழைத்து கின்றன. -

‘ உரவுக் கனே

வன்கைக் கானவன் வெஞ்சிலை வணக்கி - உளம் மிசைத் தவிர்த்த முளவுமான் ஏற்றையொடு மனவாய் ஞமலி ஒருங்கு புடை ஆட வேட்டுவலம் படுத்த உவகையன், காட்ட கடுகால் குரம்பைத் தன்கு டிவயின் பெயரும்.” 1

1, நற்றினே : 285. மதுரைக் கொல்லன் வெண்ணுகஞர். உரவுக்கணை-வலிய அம்பு, வெஞ்சிலே-கொடியவில். நெஞ்சில். தவிர்த்த-ஏவிக்கொன்ற. முளவுமான்-முட்பன்றி. ஏற்றைஆண். ஞமலி-நாய். புடைஆட-அருகில் வந்து ஆடி மகிழ. குரம்பைகுடிசை - - .