பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 நற்றிணை

மரம் , அம்மரத்தின் கிளேத்துப் பருத்த ஒரு கிளே; அக் கிளேயில் அன்றலர்ந்த அழகிய மலர் , அம்மலரின் பொன்னிறப் பொலிவு தோன்றும் மேனி , அம்மலையின் அகன்ற சுனேயின் ஆழ்ந்த நீரிடை மலர்ந்து, எதிர் எதிர் வைத்துக் கட்டிக் காட்டிய குவளே மலர் போலும், மை திட்டி அருள் ஒழுகும் கருவிழிகள் : அம்ம லே மீதிருந்து மகிழ்ந்தாடும் மயிலின் சாயல் ; ஆங் நிலத்துக் கிளி பேசினுற் போலும் காதிற்கினிய மொழிகள் : பருத்த தோள் ; இத்தகு உறுப்பு நலன்களேக் கொண்டு, அழகிய கொல்லிப் பாவை போலும் பேருருவம் காணும் காளேயர் உள்ள த்தில் காதற் கனலே மூட்டிவிடும். இக் கவினுடை யாள் மலைநிலத்து மகள்.

நீண்மலைக் கலித்த பெருங்கோல் குறிஞ்சி காண்மலர் புரையும் மேனிப், பெருஞ்சுனே மலர் பிணைத்தன்ன மாயிதழ் மழைக்கண், மயிலோரன்ன சாயல், செங்தார்க் கிளியோரன்ன கிளவிப், பனைத்தோள், பாவை அன்ன வனப்பினள் இவள்.” 1

குடி ஓம்பும் குறக்குல மகளிர் :

. மலைநாட்டு மகள், உடல் நலன் மட்டும் உடையவள்

அல்லள் : கலம்பல வாய்ந்த நல்லுள்ளம், அவள் உள்ளம்;

பெண்மைக்குரிய பண்புகள் எல்லாம் அவள்பால்

பொருந்தியிருந்தன ; அவள் கணவனுக்கேற்ற காதலி ; மக்கள் விரும்பும் மாண்புடைத் தாய் பெற்றாேர் சொல்

1. நற்றிணை: 301. பாண்டியன் மாறன்வழுதி. ... . . கலித்த-தழைத்த, . கோல்-தண்டு. நாண்மலர்-அன்று அலர்ந்த மலர்.” புரையும்-ஒக்கும். பினத்தன்ன-கட்டிவைத்தாற் போன்ற மா இதழ்-மை தட்டிய கண் இமை. மழைக் கண்-அருள்நிறைந்த கண். கிளவி-மொழி. பனே..பங்க்க. - - - ; * -