பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலே நிலம் 7i

பிழையாப் பேதை : குடி ஒம்பும் குணக்குன்று முள்ளம் பன்றி ஒன்று தங்கள் தினப்புனத்திற்குக் கேடு செய்வது கண்டான் அவள் கணவனுகிய கானவன் ; அதனல், அதன் கொடுமைக்கும் அஞ்சாது சென்று, அரும்பாடு பட்டு அதனேக் கொன்று வீழ்த்தின்ை; வீழ்ந்த பன்றியை வீட்டிற்குக் கொணர்ந்தான். இனிய மணம் காறும் கரிய கூந்தலைக் கையால் உலர்த்தியவாறே கணவனே எதிர் நோக்கி கின்ற அவள், கணவன் வருகையைக் கண்டு மகிழ்ந்தாள். வருவோன் தனியே வாராது, வேட்டை யாடி வீழ்த்திய.பன்றியோடும் வருதலைக் காணவே, அவள் மகிழ்ச்சி அளவிறந்தது. பன்றிஇறைச்சி இனிய சுவை உடையது என்பதை அவள் அறிவாள் அறிந்தும், அதைத் தானும், தன் கணவனும் மட்டுமே உண்டு தீர்த்தல் வேண்டும் என விரும்பினுளல்லள் ; மேலும், அது, தன் கணவன் கொன்றது எனும் உரிமை பாராட் டவும் ம்றுத்தது அவள் உள்ளம் , அத்தகையாள் கணவனே மகிழ்ந்து வரவேற்றாள் வரவேற்றவள், வேட்டையாடிய அவன் தளர்ச்சி போக்கவேண்டும் எனவும் எண்ணினுளல்லள்; ஆவண் கில்லாது விரைந்து வெளியே சென்றாள் : அச்சிற்றுரில் வாழும் தன் சுற்றத்தார் மனேகட்குச் சென்றாள். வேட்டையின் வெற்றிப் பொருளைக் கூறி அவர்கள் அனைவரையும் கூட்டி வந்தாள் ; பன்றி யின் உடலைப் பல கூறுகளாகப் பகிர்ந்து வைத்தாள் ; குடியில் உள்ளார். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கூறு கொடுத்து அனுப்பினுள் ; கணவன் கொணர்ந்த வேட்டைப் பொருளேக் குடிப்பிறந்தார்க்குக் கொடுத்து உதவினேன் எனும் மகிழ்ச்சி அவள் உள்ளத்தில் குடி கொண்டது , அம் மலேகிலத்து மகள்பால் காணலாம், சுற்றம் தழுவும் அக்கற்றவப் பண்பினே கபந்து பாராட் டிர்ை ஒரு புலவர்.