பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 நற்றிணை

“ கானவன் எய்த முளவுமான் கொழுங்குறை

தேம்கமழ் கதுப்பின் கொடிச்சி மகிழ்ந்துகொடு காந்தளம் சிறுகுடிப் பகுக்கும்.” 1

மனக்கவலையில்லா மனே வாழ்க்கை :

காண்பார் கண்ணேப் பறிக்கும் அழகுருவம் ; கேட் டார் கருத்தைக் கவரும் அருள் உள்ளம் இவ்விருபெரு நலங்களோடு செல்வம் மலிந்து சிறக்கும் மனே ; இங்நல் நிலையில் வாழ்வாள் ஒருத்தியின் வாழ்க்கை கவலையற்று அமைதி நிறைந்து விளங்குவதில் வியப்புண்டோ உட லழகும், உள்ளநலனும் வாய்க்கப் பெற்றாள் ஒரு பெண், செல்வ வாழ்க்கையில் சிறந்து வாழ்கிருள். அவள் மன. வற்றா வளங் கொழிக்கும் பெருமனே அவள் மனேயின் முன்புறத்தே ஒரு பலாமரம் ; தான் தரும் பயன் ஒன்றின லேயே அவள் வாழ்க்கையை வனப்புடையதாக்கும் வளம் உடையது அப்பலா ; கிளேகள் ஒவ்வொன்றிலும் எண் னற்ற கனிகள் காய்த்துத் தொங்கும் ; கனிகள் கணக், கற்றுப் போகவே, கனிந்த பின்னரும் மனேக்குரியோரால் பறிக்கப்படாமல் விடப்பட்டது பல அவ்வாறு விடப் பட்ட கனிகள், மேலும் பழுத்துத் தாமே விண்டு போக, அவற்றின் சுளேகள், அம்மனேயின் முற்றம் முழுதும் உதிர்ந்து சிதறிக்கிடக்கும் , அச்சுளேகளின் மனம் o நாறும் அவ்விடமே, அவள் மகிழ்ந்து உறங்கும் இடமாம் ; ஆங்கு உறங்கப் புகும் அவள், அருகே உள்ள மலேயில் தோன்றி, வெண்ணிறத் திவலைகள் சிதறி வீச, ஒ எனும் பேரொலி எழ வீழ்ந்தோடும் அருவியின் ஒலி, மகவை

1. நற்றிணை 85. நல்விளக்கர்ை. r முளவுமான்-முள்ளம்பன்றி. கொழுங்குறை - கொழுத்த இறைச்சித். துண்டு. கதுப்பு-கூந்தல். கொடிச்சி-குறப்பெண், காந்தளம் சிறுகுடிகாந்தள் மலரின் மணம் வீசும் சிற்றுார். - . .