பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலே நிலம் 78

உறங்கப் பண்ணும் தாயின் தாலாட்டுப் பாடல்போல் இன்பம் ஊட்ட, அவ்வொலியைக் கேட்டுக்கொண்டே அயர்ந்து உறங்குவள் என்னே, அப்பெண்ணின் மனம்

கிறைந்த மனே வாழ்க்கை இன்பம் !

“ சினேதொறும் தூங்கும் பயங்கெழு பலவின்

சுளையுடை முன்றில் மனையோள், கங்குல்

ஒலிவெள் அருவி ஒலியில் துஞ்சும்.’ 1 கேடு அஞ்சாக் குறச்சிறுவர் :

புலிக்குப் பிறந்தது பூனே ஆகாது ; ஆண்மை அஞ்சாமை முதலாம் அரிய பண்புகளின் பிறப்பிடமாய் விளங்கும் மலை நாட்டாரின் வயிற்றிற் பிறந்த மக்களும் அஞ்சாமை நிறைந்த r உடையவராய் வாழ்ந் தனர். குறச்சிறுவர் சிலர் தம் தினக்கொல்லேயில் காவல் மேற்கொண்டு வாழ்ந்துவந்தனர். ஒரு காள், புலியும் யானேயும் போர் செய்யும் பேரொலி கேட்டது ; அது கேட்ட அச்சிறுவர், அஞ்சி, அப்புனத்தை விட்டு ஒடினரல்லர் ; ஆண்மை நிறைந்த அவர்கள், அவ்வொலி யைக் கேட்டதோடு ஆறுதல் அடையாது, அப்போர்க் காட்சியைப் போய்க்கான ஆசைப்பட்டனர் ஆேசைப்பட்ட அவர்கள், சிறுவரே எனினும், உலகியல் அறிவும் ஒரளவு வாய்க்கப் பெற்றிருந்தனர் புலியையும், யானேயையும் தனித்து எதிர்ப்படினும் அவற்றால் இடையூறு நிகழும் , அவையிரண்டும் ஒருங்கே கூடித் துயர் செய்யத்துணியின் அவற்றினின்றும் தப்பிப் பிழைத்தல் இயலாது ; மேலும், அவையிரண்டும், ஒன்றையொன் அ பகைத்துப் போரிட்டுக் கொண்டிருக்குங்கால், எதிர்ப்பட்டுவிடின் அவற்றால் அழி வுறுதல் முக்காலும் உறுதி என்பதை அறிவர். அதனல்

1. நற்றிணை 77, கபிலர். r - : சினை-கிளை. துங்கும்-தொங்கும். பயங்கெழு-பயன்மிக்க கங்குல்

இரவில். துஞ்சும்.உறங்கும். .

5 ... - *