பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 நற்றிணை

அவற்றின், எதிர்செல்லல் அறிவுடைமை யாகாது எனக் கருதினர். ஆல்ை, அப்போர்க்காட்சியைக் கண்டு களிக்கவேண்டும் எனும் ஆர்வம், ஆங்குப் போகாதிருக்க விடவில்லை ; அதல்ை, தமக்கு ஊறு தேடிக்கொள்ளாதே, அக்காட்சியைக்காண எண்ணினர் : அப்போர் நிகழும், இடத்திற்கு அணித்தே, அவை எளிதில் அணுகுதற் கியலாவுயர்வுடைய மலேயொன்றிருக்கக் கண்டு, அதன் உச்சியில் ஏறி, ஆங்கிருந்தவாறே, அப்போர்க் காட்சியைக் கண்டுகளித்தனர் ; போர்க்காட்சியைக் காணக்கான, அவர் ஆர்வம் அளவிறந்தது ஆர்வ மிகுதியால், தம் கையில் வைத்திருந்த தொண்டகப் பறைகளே அடித்து முழக்கி ஆரவாரிக்கத் தொடங்கினர். அப்பறை எழுப்பிய பேரொலி, அவர்கள் காத்துக்கிடந்த தினேப் புனத்தில், அவர்கள் இல்லாமையால் அஞ்சாது புகுந்து தினக்கதிர் தின்று தங்கும் கிளிகளே அச்சுறுத்தி விரட் டிற்று காடென்றும், மலேயென்றும் கருதாது, களிறு, கண்டும், புலி பார்த்தும் அஞ்சாது ஆடியும் பாடியும் அதி மகிழ்ந்து வாழும் குறச்சிறுவர்களின் குணநலம், கண்டு பாராட்டற்குரியதாம்.

“ பூம்பொறி உழுவைப் பேழ்வாய் ஏற்றை,

தேம் கமழ் சிலம்பில் களிற்றாெடு பொரினே, துறுகல் மீமிசை உறுகண் அஞ்சாக் குறக்குறு மாக்கள் புகற்சியின் எறிந்த தொண்டகச் சிறுபறைப் பாணி அயலது பைந்தாள்:செந்தினைப் படுகிளி ஒப்பும்.” 1

1. நற்றிணை 104. பேரிசாத்தனர்.

பூம்பொறி-அழகிய வரிகள். உழுவை- புலி. பேழ்வாய்-அகன்ற வாய். ஏற்றை-ஆண். சிலம்பு-மலை. துறுகல்-பெரும் பாறை. மீ மிசை-. மிக உயர்ந்த இடத்தில். உறுகண்-துன்பம். குறக்குறுமாக்கள்-குறக்குலச் சிறுவர். புகற்சி-ஆர்வம். எறிந்த-முழக்கிய தொண்டகம்-மலைகிலத்திற் குரிய ஒருவகைப் பறை. பாணி-ஒலி. படுகிளி-படிந்து தினை உண்ணும் . - x * : *