பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. காட்டு நிலம்

i எதிர்நோக்கி நிற்கும் இடம் காடு ; கோடையின் கொடுமையால் வாடிய மரஞ்செடி கொடிகள் கார்காலத்து மழைபெற்றுத் தளிர்த்துப் பூத்துப் பேரின் பம் தரும் இடம் காடு : காலேயில் சென்று, கானெலாம்: மேய்ந்து மால மனதிரும்பும் தாய்ப்பசுக்களேக் கன்றுகள் எதிர் நோக்கி நிற்கும் இடம் அக்காடு, பழுமரம் நாடிப் பகலெலாம் பறந்து திரிந்து, தாமும் நுகர்ந்து, தம் பெடைக்கும் பார்ப்பிற்கும் கனிகொண்டு மீளும்பறவைகளே அப்பெடையும் பார்ப்பும் ஆர்வமுடன் எதிர்நோக்கி நிற்பதும் அக்காட்டிலேயே; காதற்கலமான், தன் காமர்ப் பிணையை நோக்கிப் பாய்ந்தோடுவதும் ஆண்டே நிகழும் ; இவ்வாறு இன்பநுகர்வினே எதிர்கோக்கி கிற்றல், மரம் செடி கொடிகளும், மாவும் பறவையும் போலும் சிற்றறி வுயிர்கள் மாட்டு மட்டுமே நிகழ்வதில்லை. அப்பண்பு ஆறறிவுவாய்ந்த மக்களுக்கும் பொருந்தும். பொருள் வேண்டியும், போர் குறித்தும், கற்றுப் பயன் கோடல் கருதியும் மனவியரைப் பிரிந்துபோகும் கணவன்மார்,