பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்டு நிலம் 77

வினேக்கண் வெற்றிபெற்று, வீட்டின்கண் தனித்திருக்கும் தம் மனைவியரை கினேந்து மீள்வதும், போன கணவன் மாரின் வருகையை மனேவியர் எதிர்நோக்கி நிற்பதும் அக்காட்டுகாட்டின் கண்ணே நிகழும். இவ்வாறு எவ்வுயிர்க்கும் இன்பம் சுரக்கும் இடமாய்த் திகழ்வது காடு. காட்டின் கார்காலமும், அக்காலத்து மாலையும், கணவன்மார் பிரிந்துபோக, அவர் வருகையை எதிர் கோக்கிக் காத்துக்கிடக்கும் ஒரு சில மகளிர்க்குக் கொடுமையுடையபோல் தோன்றினும், பொதுவாக அந் கிலத்தில் வாழ்வார்க்கும், ஆங்குச்சென்று அவற்றைக் கண்டு நிற்பார்க்கும் மனமகிழ்ச்சி தரும் பெருங்காட்சி

to j6]] fris),

கார் தொடங்கிற்று :

புது மழை பெய்யப்பெற்று மரங்களெல்லாம், புத்தம் புதிய தளிர் ஈன்று பூத்துக்குலுங்கும் காலம், கார்காலம் : அது, ஆவணியும், புரட்டாசியும் ஆகிய இரு திங்களும் கூடிய காலமாம். இதோ அக்கார்காலம் தெர்டங்கி விட்டது ; பிடவம் எனும் மரம், இலைகள் ஈனதே மலரும் இயல்புடையது ; அது அரும்புகளால் நிறைந்துவிட்டது: புதர்களேப் பற்றுக்கோடாகக் கொண்டு படரும் முல்லைக் கொடிகள், புதர்தோறும் மலர்ந்து மணம் காறின : கொன்றை மரங்கள், பொன்னிற மலர்களால் பொலி வுற்றுத் தோன்றின ; கரியாமரத்தின் சின்னஞ்சிறு கிளேகளும், லே மணியின் நிறம் வாய்ந்த மலர்களே நிறைய மலர்ந்து மாண்புற்றன. பன்னிற மலர்கள், பார்ப்போர் கண்களுக்கு விருந்துாட்ட, அவற்றின் பல்வேறு மணமும் ஒன்று கலக்க வீசும் புதுமணம் உள்ளத்திற்கு உவகை ஊட்டப் பிறக்கும் கார்காலக் காட்சியைக் கண்டுகளித்தார்

ஒரு. புலவர் :