பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 நற்றிணை

இலே இல் பிடவம் ஈர் மலர் அரும்பப், புதல் இவர் தளவம் பூங்கொடி அவிழப், பொன் எனக் கொன்றை மலர, மணி எனப் பன்மலர்க் காயாங்குறுஞ்சினை களுலக், கார் தொடங்கின்று ‘

மாலை புகுந்தது :

பேரொளி பரப்பிப், பகற்காலத்தைப் பயனுடைய தாக்கும் தன் தொழிலே முடித்துக் கொண்ட ஞாயிறு, மேலைத்திசை மலைகளுக்கிடையே புகுந்து மறைந்து கொண்டான். பறக்கும் திறம் வாய்க்காத தம் இளம் பார்ப்புக்களைக் கூட்டில் விட்டுக் காலையில் பறந்துபோன பறவைகள், அப்பார்ப்புக்களுக்கு வேண்டும் இரையோடு அக்கூட்டினைச் சென்று அடங்கின மயிர் திரளக், கறுத்துத் தோன்றும் கழுத்தினே உடைய கலைமான், மாலே இருள் கண்டு, மருளும் தன் பிணேயின் அச்சம் அகலுமாறு அதை அணேத்துக் கொண்டது. முல்லே அரும்புகள் மலர்ந்து மணம் வீசின; காட்டின் இடை யிடையே, காணும் இடங்கள் தோறும், காட்சி அளிக்கும் புதர்களில், காட்டில் ஏற்றி வைத்த விளக்குகள் போல் காந்தள்கள் மலர்ந்தன. காட்டில் புல் மேய்ந்து கன்றை கினேந்து வீடு திரும்பும் பசுக்களின் கழுத்தில் கட்டிய மணிகளின் தெளிந்த ஒசை, அவ் ஆனிரையின் பின் வரும் ஆயர் ஊதும் குழலோசையோடு கலந்து, மெல்ல வந்து ஒலித்தது. அம்மங்கல ஒலியோடு மாலையும் புகுந்தது : -

1. : 242. 3-165 GL 5676Trgf. ஈர்மலர்-தேல்ை ஈரம்பட்ட மலர். இவர்-படரும். தளவம்-முல்லை, அவிழமலர. குறுஞ்சினை-சிறிய கிளே. களுல-நிறைய. ... -