பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்டு நிலம் 79.

பல் கதிர் மண்டிலம் பகல் செய்து ஆற்றிச் சேய் உயர் பெருவரைச் சென்று அவண் மறையப், பறவை பார்ப்புவயின் அடையப், புறவின் மா எருத்து இரலே மடப்பினை தழுவ, முல்லை முகை வாய்திறப்பப், பல்வயின் தோன்றி தோன்றுபு புதல் விளக்கு உருஅ, மதர்வை கல்லான் மாசில் தெண் மணி கொடுங்கோல் கோவலர் குழலோடு ஒன்றி ஐது வந்து இசைக்கும் அருள் இல் மாலே ‘ 1

மருண்டு நோக்கும் மான் :

முல்லை எனும் பெயரால் அழைக்கப் பெறும் குறுங் காட்டிற்குக் கவின் அளிப்பன, கலேயும் பிணையுமாய்க் கலந்து வாழும் மான் கூட்டங்களாம். துன்பக்தரும் கொடுவிலங்குகள் ஆங்கு வாழ்வதில்லை. தம் கர்தல் வாழ்வால், காவற்ற கண்களால் ம்க்கள் வாழ்கையை மாண்புடையதாக்கும் மான் போலும் உயிரினங்களே ‘மிகுதியாம்.

முல்லே கிலத்து ஆயர், காட்டை அழித்து ஆக்கிய பழங்கொல்லேயை, மண் கீழ் மேலாமாறு நன்கு உழுது விதைத்த வரகு, முளேத்து, இடங்கொளக் கிளேத்து, நன்கு தழைத்துக் கதிர் ஈன்றது; மன்றில் கின்று வழக்காடுவோர், அவ்வழக்கின விளங்க எடுத்து உரைக் குங்கால், சுட்டிச் சுட்டிக்காட்டும் அவர் கைவிரல்கள் போல், இரண்டு இரண்டாக இணைந்து விளங்கும் அவ் வரகுக் கதிரைக் காணும் மான்பினே, அவற்றை மகிழ்ந்து

1. நற்றிணை : 39. சேகம்பூதனர். - - - பல்கதிர்மண்டலம்-ஞாயிறு. ஆற்றி - முடித்து. புறவு-காடு. மாகருமை, எருத்து-கழுத்து. இரலை-கலைமான். முகை-அரும்பு, வாய் திறப்ப-மலர. தோன்றி-காந்தள் மலர். புதல்-புதர். விளக்கு உருஅவிளக்குப்போல் தோன்ற, மதர்வை-செருக்கு. கொடுங்கோல்-ஆயர்கைத் தண்டு. ஒன்றி-கலந்து. ஐது-மெல்ல.