பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 - நற்றிணை

உண்ணும்; பின்னர், பால் வித்துக்கள் உதிர்ந்து மனத் திற்கு மகிழ்ச்சி ஊட்டும் அக்காட்டின் ஒருபால், தான் விரும்பும் கலேமான் உலாவக் கண்டு, ஆங்கு ஒடி அக்கலே யோடு கலந்து மகிழ்ந்து ஆடும். அக்காட்சியைக் கண்டு மகிழும் வாய்ப்பினே அக்கால மக்கள் எளிதிற் பெற்றிருந்தனர்.

‘ விதையர்கொன்ற முதையல் பூழி

இடுமுறை நிரப்பிய ஈரிலே வரகின்

கவைக்கதிர் கறித்த காமர் மடப் பிணே

அரலை அம் காட்டு இரலையொடு வதியும், !

பிணையைக் காணுது கலங்கும் கலை :

மானின் கண்கள், பொதுவாகவே மகிழ்ச்சி யூட்டும் இயல்புடைய. அவற்றின் - அழகு கண்டு மயங்கிய புலவர்கள், அவற்றை மகளிரின் மைதீட்டிய விழிகளுக்கு உவமை காட்டி உயர்வு கூறிப் பாராட்டியுள்ளனர். அம் மானினத்தின் இளேய கன்றுகளின் கண்கள் பேரழகு வாய்ந்தனவாம் ; இயல்பாகவே கரவுள்ளமற்ற இனத்திற் பிறந்து, தம் இளமையால் கரவற்ற அவ்வியல்பை மிகுதி யாகப் பெற்றிருக்கும் மான் கன்றுகளின் விழிகள் மிகப் பேரழகுடையவாம். அக்கண்ணழகில் மயங்கி அறிவிழந்து போன ஒரு புலவர், அவ்விளங் கன்றை, விழிக்கண் பேதை எனும் விழுமிய பெயரிட்டு அழைத்து, அச்சிறப்பால் தன் இயற் பெயரையும் இழந்துள்ளார். புலவர் தம் இயற் பெயரையும் இழக்கப் பண்ணும் பேரழகு வாய் த விழிகளேக் கொண்ட அக்கன்றுகள்பால், கலைக்கும் பிணக்கும் பேரன்பு பிறக்குமன்றாே ?

1. நற்றிணை 121. ஒரு சிறைப்பெயரியஞர். -

விதையர்-உழுதொழில் புரியும ஆயர் கொன்ற-பலகால் உழுத. முதையல்-பழங்கொல்லே. இடுமுறை-விதைக்கும் முறை. கவைக்கதிர்பிளவுபட்ட கதிர் கறித்த-தின்ற. அரலை-மரல்விதை. *