காட்டு நிலம் 81
கலைமான் ஒன்று, தான் விரும்பும் பிணேயோடும், விழிக்கண் பேதையோடும் ஒரு காட்டில் வாழ்ந்திருந்தது. ஒரு நாள், அவை தம் இனத்தோடும் கூடி, எங்கோ ஓர் இடம் தேடிச்சென்று கொண்டிருந்தன ; செல்லுங்கால் இடைவழியில், பிணை, வழி தவறிவிட்டது. அப் பிணேயையே பின்பற்றிச் செல்லும் இயல்புடைய அதன் கன்றும் வழி தவறி விட்டது. இதை அப்போது அறிக் திலது அக்கலை. ஒன்று திரண்டு பெருங்கூட்டமாய்ச். செல்லும் தன் இனத்தின் இடையே கலந்து யாண்டேனும் இருக்கும் எனும் எண்ணத்தால் சென்றுகொண்டே யிருந்தது. சிறிது துாரம் சென்றது ; மீண்டும் அக்கூட்டத்தை நோக்கிற்று; அவற்றினிடையே, தன் பினேயும் கன்றும் இல்லாமையை உணர்ந்தது ; கலங் கிற்று அதன் உள்ளம் அவ்விடத்தினின்றும், மேலே ஒர் அடி எடுத்து வைக்கவும் அ ஆல் இயலவில்லை. வந்த வழியே பின் நோக்கி ஓடிற்று இடைவழியில், *ஒவ்வோர் இடத்திலும் கின்று கின்று, அவற்றைத் தேடித் தேடி அகலந்தது அலேயும் அதன் காட்சி, காண்பார்க்குக் கடுந்துயர் தருமேனும், அக்காட்சி காட்டும் அதன் காதல் உள்ளத் ை உணர வல்லார்க்கு, அது பெரு மகிழ்ச்சி தருமன்றாே :
‘கழிப் பெயர் களரில் போகிய மடமான் - விழிக்கண் பேதை யொடு இனன் இரிங்து ஓடக், காமர் நெஞ்சமொடு அகலாத் தேடுஉ நின்ற இரல் ஏறே 1
1. நற்றினே : 242. விழிக்கண் பேதைப் பெருங்கண்ணஞர், மானின் இளங்கன்றை விழிக்கண் பேதை “ எனும் பெயர் கொடுத்துச் சிறப்பித்தமையால், அக்கால மக்கள், அப் புலவர்க்கு, விழிக்கண் பேதை எனும் அப்பெயரளித்துச் சிறப்பித்தனர். - -
களர்-களர்நிலத்தில் இரிந்து-பிரிந்து. காமர்-ஆசை, அன்பு. இரலை-1 tான். ஏறு-ஆண். இரலஏறு-கலைமான், . . . . . . . . . . . . . . . .