பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 நற்றிணை

ஒழுக்க நெறி உணர்த்தும் ஊர்க் குருவி :

குருவிக் குடும்பம் ஒன்று, முல்லே கி த்து மனே யொன்றில் வாழ்ந்திருந்தது ; அவவிட்டுக் கூரையின் உள்ளே கூடுகட்டி வாழ்ந்திருந்தது அக்குடும்பம்; சே வல், அது விரும்பும் பேடை, ஈங்கை மலர் போன்ற உருவினவாய அவற்றின் இளம்பார்ப்புக்கள், இவையே அக்குடும்பம் ; கார் காலத்து ஒரு நாட்காலே, கூட்டை விட்டு வெளியே சென்ற சேவல், சென்ற இடத்தில் அழகிய பெண் குருவி யொன்றைக் கண்டது ; அதன் பால் ஆசை பிறக்கவே, அப்பகலே, அதனோடு சேர்ந்து அவ்விடத்திலேயே கழித்தது. மாலே வந்துற்றதும் தன் கூட்டை நோக்கிப் பறந்தது. கூட்டின் வாயிற்கண், அதன் வரவை எதிர் நோக்கியிருந்தன பேடையும் பார்ப் புக்களும்; சேவலும் வந்து சேர்ந்தது. வந்த சேவலை வரவேற்கக் கூட்டின் வாயிற்கண் காத்திருந்த பேடை, சேவலின் தோற்றத்தைக் கண்டது; சென்ற இடத்தில் வேறு ஒரு பெண் குருவியோடு தொடர்பு கொண்டு வருகிறது என்பதை உணர்த்தி விட்டது அத்தோற்றம். அதை அறிந்து கொண்ட பேடை வந்த சேவலை வரவேற்று உள்ளே அழைத்துச் செல்வதை விடு த்தது; அதற்கு வாயில் விட மறுத்த து. அதை வெளியே விடுத்துத் தன் பார்ப்போடு உள்ளே புகுந்து வாயிலை அடைத்துக் கொண்டது. வெளியில் தங்கிய சேவல், தன் செயல் கண்டு வருந்திற்று கார்கால மாதலின், சிறிது நாழிகைக் கெல்லாம் மழை பெய்யத் தொடங்கி விட் து ; வர்டையும் வீசிற்று. வாடையும், மழையும் வருத்த, உடல் குளிரால் நடுங்க, அவ்விடத்திலேயே செயலற்றுக் கிடந்தது சேவல். சேவலின் ஒழுக்கங் கெட்ட செயல் கண்டு சினந்து, அ தப் புறத்தே விட்டுப் போயிற்றேனும் பேடைக்கு அதன் பால் உள்ள அன்பு குறைந்திலது :