பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்டு நிலம் 83

அதனுல் கூட்டின் வாயிலேத் திறந்து வெளியே கோக்கிற்று : வாடையும், மழையும் வருத்த வீழ்ந்து கிடக்கும் சேவலேக் கண்டது , இனியும், அதை அங்கனே விட்டுவைப்பின், அது இறந்து போம் ; அதல்ை தனக்கும் பெரும் பழி உண்டாகும் ; ஆதலின், அதை அதன் பிழை பொறுத்து ஏற்றுக் கொள்வதே பெருமை தரும் செயலாம் என உணர்ந்தது. அருள் நிறைந்த அதன் உள்ளத்தால், சேவலின் வ த்தத்தை மேலும் காண்பது இயலாதாயிற்று. வெளியே வந்து, வாய் திறந்து வருக ” என அழைத்துக் கொண்டு உட்சென்றது. என்னே அதன் அன்பு என்னே அதன் ஒழுக்கம் பிழை காணின் பழித்து ஒறுக்கும் உரமும், பி ழை புரிந்தார். கம்பிழை உணர்ந்து வருந்திய வழி, அப்பிழை பொறுத்து ஆட்கொள்ளும் அன்பும் மனேவியர்க் மாண்பு தரும்

குணங்களாம் என்பதை அறிவுறுத்தி அறவழி காட்டும்

அக்குருவிக் குடும்பம் வாழ்க.

‘ உள்ளிறைக் குரீஇக் கார்அணல் சேவல்

பிறபுலத் துணையோடு உறைபுலத்து அல்கி வந்ததன் செவ்வி கோக்கிப் பேடை நெறிகிளர் ஈங்கைப் பூவின் அன்ன சிறுபல் பிள்ளையொடு குடம்பை கடிதலின், துவலேயின் கனங்த புறத்தது, அயலது கூரல் இருக்கை அருளி, கெடிது கினைந்து ஈர நெஞ்சின் தன்வயின் விளிப்ப. 1 -


1, நற்றினே : 181. - உள்இறை-விட்டின் உட்கூரை. கார் அனல்-கரிய கழுத்து. பிறபுலத்

துணை-வேறிடத்தே உள்ள பெண் குருவி. உறைபுலம்-தங்கும் இடம்,

அல்கி-தங்கி. செவ்வி-தோற்றம். நெறிகிளர்-நெருங்கிய குடம்பை-கூடு. கடிதலின்-விலக்கலின். துவலே-மழை. கூரல் இருக்கை-குளிரால் நடுங்கி யிருக்கும் இருக்கை. ஈரநெஞ்சு-அன்பு உள்ளம், - - -