பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 ாற்றிணை

கோழியின் காதல் :

காதல் வாழ்க்கையைத் தாமே அறிவர் எனச் செருக்கித்திரியும் மக்கள் இனத்திற்குக், காதல் நெறி இது என்பதை எடுத்துக்காட்டி, கடமையை எண்ணிக் காதலைக் கைவிடும் கயவர்க்குக் காதற் சிறப்பினே உணர்த்தும் உயர்வுடைமை, விலங்குகளுக்கும் பறவை களுக்குமே உண்டு. காதலை மறவா மாண்பு, காட்டுப் பறவைகளிடத்தும் காணலாம். கோழி, இயல்பாகவே அன்புடையது ; தன் குஞ்சுக்குக் கேடுசெய்ய நினைக்கும் கொடும் பறவைகளே அஞ்சாது எதிர்க்கும் அன்புடையது கோழி : “ கோழியும் தன் குஞ்சுதனேக் கொல்லவரும் வான்பருந்தைச் சூழ்ந்து எதிர்க்க அஞ்சாது ‘ எனக் கோழியின் அன்பை, அவ் அன்பு காரணமாகப் பிறக்கும் அஞ்சாமையினைப் பாராட்டியுள்ளார் ஒரு புலவர். தாம் ஈன்ற குஞ்சுகள்பால் பேரன்பு காட்டும் கோழிகள், காதல் நெறியிலும் சிறந்து விளங்கும் என்பதில் ஐயமுண்டோ :

அழகிய சேவற்கோழியொன்று, தன் பெடையோடு வாழந்திருந்தது. காய்ச்சி உருக்கிய ஆன் மெய்யில் பால் தெளித்ததுபோலும் வெண்புள்ளிகள் விளங்கும் கழுத்து, தேரையின் குரல்போல் தெளிவாக ஒலிக்கும் தொண்டை, இவற்றால் கண்டார் மகிழும் உருவம் உடையது அச் சேவல்; ஒரு நாள் பெருமழை பெய்துகொண்டிருந்தமை யால், வெளியே சென்று, இரை தேடிப் பெறமாட்டாது வருந்தியிருந்தன அச்சேவலும் பெடையும், தன் பெடையின் பசித்துயரைக் கண்டும் செயலற்று இருத்தல் சேவலுக்கு இயலாதாயிற்று. மழையின் ஒழிவை எதிர் நோக்கியிருந்தது. மழையும்கின்றது. உடனே காட்டிற்குள் ஒடிற்று ஆங்கே, மணலில் மழைநீர் வடியவும் இல்லை : பெடையின் பசித்துயரைப் போக்கவேண்டும் என்பதில்