பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்டு நிலம் 85

அதற்குள்ள ஆர்வம், அந்நீர் வடியுங்காறும் பொறுக்கச் செய்திலது ஈரமணலக் கிளேக்கத் தொடங்கிவிட்டது ; கிளேத்தவிடத்தே நாங்கூழ்ப் புழுவொன்றைக் கண்டு, பற்றிக் கொன்றது ; கொன்றுகொண்ட அவ்விரையைத் தன் அலகுகளில் ஏந்திக்கொண்டே பெடையிருக்கும் இடம் நோக்கிப் பறந்தது. என்னே அதன் அன்பு 1 அக் காதற்காட்சியைக் கண்ட ஒர் இளேஞன், வீட்டில் விட்டுப் பிரிந்துவந்த தன் காதலிபால் விரைந்து ஒடிஞன். அவனே, அவன் காதலிபால் துரத்தும் காட்டுக்கோழியின் காதற் . பெருமைதான் என்ன்ே !

‘ ஏமதி வலவ! தேரே உதுக்காண்,

உருக்குறு கறுகெப் பால் விதிர்த் தன்ன, அரிக்குரல் மிடற்ற அம்நுண் பல்பொறிக் காமரு தகைய கான வாரணம் பெயல் நீர் போகிய வியல்கெடும் புறவில் புலரா ஈர்மணல் மலிரக் கெண்டி, நாள் இரை கவர மாட்டித் தன் பெடை நோக்கிய பெருங்தகு கிலேயே.” 1

ஆனிரை ஓம்பும் ஆயர் :

இன்ப நுகர்விற்கு ஏற்ற இடமாய முல்லை நிலத்தில் வாழும் ஆயர் உள்ளமும் அன்பால் நிறைந்ததாம். ஒருவர் வாழப் பலர் வருந்தவேண்டிய கிலே இன்றிப், புல்லும் புனலும் அளித்து ஆனிரைகளேயும் வாழவைத்து, அவை அளிக்கும் பால் முதலாம் பல பொருள்களால் தாமும்

1, நற்றினை : 21. மருதன் இளநாகனர்.

ஏமதி-விரைந்து ஒட்டுவாயாக. வலவன்-தேர்ப்பாகன். உதுக்காண் அதோயார் விதிர்த்தல்-தெளித்தல், அரிக்குரல்-தேரையின் குரல்ஒலி போலாம் குரல். மிடற்ற-கழுத்தை உடைய அம் நுண்பொறி-அழகிய சின்னம் சிறு புள்ளிகள். காமருதகைய-அழகிய. கானவாரணம்-காட்டுக் கோழி, பெயல் நீர்.மழை நீர். போகிய-வடிந்த, மலிர.நிறைய. கெண்டி- - பறித்து. நாள் இரை-காலப் போதில் கிட்ைத்த இரை. -