பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 நற்றிணை

வாழ்ந்து பிறரையும் வாழப்பண்ணும் வளமார் வாழ்க்கை ஆயர் வாழ்க்கை. அவர் வாழ்க்கையின் இவ்வியல்பறிந்த இளங்கோவடிகளார், ஆ காத்தோம்பி ஆப்பயன் அளிக்கும் கோவலர் வாழ்க்கை ஒர் கொடும்ப்ாடில்லை : எனக் கூறிப் பாராட்டியுள்ளார். அதிலும் மனதாலும், கொடுமை எண்ணு மாண்புடைய அறத்துறை அடிகளாய’ கவுந்தியின் வாயில்வைத்து வாழ்த்தியுள்ளார்.

அடைமழை, ஆனிரைச் செல்வத்தை அழிக்கும் பகைகளுள் ஒன்று. பெருமழை பெய்யின், ஆனிரைகள், அதிலும் ஆடுகள், வெளியே சென்று உணவு கொள்ள மாட்டாதும், குளிரால் கடுங்கியும் உடல் குன்றி உயிர் இழக்கும் ; அதல்ை அவற்றை நம்பி வாழும் ஆயர், மழைக்காலத்தில் அவற்றைக் காப்பதில் விழிப்பாயிருப்பர்; மழை நிறுத்தத்தை எதிர்நோக்கி யிருந்து, அது கின்ற வுடனே தம் கிரைகளே மேட்டு நிலங்களுக்குக் கொண்டு சென்று மேய விடுவர். அதன் பொருட்டுத் தம் மனேவி! மக்களேப் பலநாள் பிரிந்திருக்க கேரினும் வருந்தார். இன்றி. யமையாக் காலத்தும், தம் கிரைகளேத் தம்மோடு வரும் பிற ஆயர்பால் ஒப்படைத்து வந்து விரைவில் மீள்வர். இஃது, ஒர் ஆயன் வாழ்க்கை.

கார் காலத்துக் கருமேகம் கால் இறங்கிப் பெய்து ஒய்ந்தது. அதை எதிர் நோக்கியிருந்த ஆபன், உணவுக் கலம் தாங்கும் உறி, உடற்குளிர் போக்க உதவும் தீக் கடைக்கோல் போலும் கருவிகள் இட்ட தோல்பை, மழை நீர்படாது மேனியை மறைக்க உதவும் பனேஒலைக் குடை ஆகிய இவற்றை முதுகின் பின்புறத்தே ஒரு சேரக் கட்டிக் கொண்டான் கையில், பெரிய தடியை ஏந்திக் கொண்டான். மழையின் சிறுதுாரல் தன்னே ந&னப் பதையும் பொருட்படுத்தாதே, ஆனிரைகாே ஒட்டிச்