பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியப் புதையல்

நற்றிணை

1. நாடு

வானம் பொய்ப்பினும் வளம் தரும் மலை :

உயிர்களுக்கு உணவு இன்றியமையாதது; அவ் வுணவினும் இன்றியமையாதது நீர் : உயிர்கள், உண வின்றி ஒருசில நாள் வாழினும் வாழும்; ஆல்ை உண்டற் குரிய நீரின்றி ஒருபொழுதும் வாழா. அத்துணேச் சிறப் புடையது ர்ே. அம்மட்டோ அவ்வுயிர்கள் உண்ணும் உணவை ஆக்கிஅளிப்பதும் அங்ேேர. உணவுப் பொருள்களே விளத்துத் தருவது கிலமேயாயினும், அந் கிலம், நீரின் துணைபெற்ற வழியே விளையும் , அதனல், “ உணவெனப்படுவது கிலத்தொடு நீரே “ என்று அறிந்து கூறினர் ஆன்றாேர் ஒருவர். வேட்கை தீர்க்கும் உணவாகியும், பசி தீர்க்கும் உணவை ஆக்கியும் உயிர்களே