பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 நற்றிணை

நிலத்தின் நீர்வளம் கண்டு மகிழ்ந்த புலவர்கள், அதைப் பல்வேறு வகையில் விளக்கியுள்ளனர்.

மீன் வகையுள் வாளே என்பதும் ஒன்று உள்நாட்டு நீர்நிலைகளில் வளரும் மீன்களுள், உருவிற் பெரியது வாளே ; பெரிய பெரிய நீர் நிலைகளில் மட்டுமே வாழக் கூடியது ; அதன் ஆட்டத்தைக் கூறி, அக்கால நீர் வளத்தை விளக்கியுள்ளார் ஒரு புலவர்.

பாண்டியர், தம் நாட்டு நிலவளத்தைப் பெருக்க எண்ணியெடுத்த ஒரு பெரிய குளம் ரோல் நிறைந்து, மடை அடைக்கப்பட்டிருந்தது. பல திங்கள் வரையும், மடையெடுக்கப்படாமலே கிடந்தமையால், அதில், வாளே, வரால் போலும் பெரிய பெரிய மீனினங்கள் நிறைந்தன. ஒரு நாள், திடுமென மடை எடுத்துக்கொண்டது. தேங்கி யிருந்த நீர் விரைந்து வெளியே பாய்ந்து ஓடிற்று. வெள்ள மென ஒடிய அந்நீரில், கிலேத்து கிற்க மாட்டாத ஒருவாளே, அக்குளத்தை விட்டு வாய்க்காலே அடைந்தது. அங்கும்” நீரை எதிர்த்தோடுவது அதனுல் இயலவில்லை. நீர் அவ்வளவு வேகமாக ஒடிக்கொண்டிருந்தது. அதனல் சிறிது தூரம் அந்நீரோடே அடித்துக்கொண்டு போகப் பட்டது. வெள்ளத்தின் வேகம் தணிந்ததும், நீரை எதிர்த்து நீந்திச் சென்றது. சென்று, வாய்க்காலே அடுத் துள்ள வயலுள், அவ்வயலுக்கு நீர் பாயும் சிறிய மடை வாய் வழியே புகுந்து ஒடிற்று ஆங்கு அங்கிலத்தை உழுதுகொண்டிருந்த எருமைகள், கால் எடுத்து வைக்குங் தோறும் சிதறும் சேறு, புள்ளி புள்ளியாக, அதன் மேற்புறத்தே தெறித்து வீழ்ந்தது. சேறு படிய ஒடிய வா8ளயைக்கண்ட வயல் உழவர், தம் கைக்கோல் கொண்டு அதைப் புடைத்தனர். அவர் அடிக்கும் அஞ்சாது, அவர் - கையிலும் அகப்படாது, சேறும் நீரும் கலந்த அவ்வயலில்