பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வயல் நிலம் 93

அங்கும் இங்கும் ஒடி அலைந்தது. அவ்வாறு நெடிது நாழிகை ஒடிய அது, கடைசியில், அவ்வயலின் ஒருபால் வரப்பை அடைந்தது , வரப்பைக் கடந்து செல்ல மாட்டா மையால் ஆங்கேயே கிடந்து புரண்டுகொண்டிருந்தது.

இக்காட்சியைக் கண்டு களித்த புலவர், பெரு நீரில் வாழும் வாளே, வயலில் விளேயாடிற்று எனப்பாடி, தமிழ கத்து மருத நிலங்களின் நீர் வளத்தை விளக்கியுள்ளமை 2@TT

கல்லா யானைக் கடுங்தேர்ச் செழியன் படைமாண் பெருங்குளம் மடைநீர் விட்டெனக் கால் அணைங்து எதிரிய கணக்கோட்டு வாளே அள்ளல்.அம் கழனி உள்வாய் ஓடிப் பகடு சேறு உதைத்த புள்ளி வெண்புறத்துச் செஞ்சால் உழவர் கோல்புடை மதரிப் பைங்கால் செறுவின் அணமுதல் புரளும்.’

துtன் வளர்க்கும் வயல் : -

மீன், ஒன்று பலவாகி வளர்ந்து வாழ்தல், நீர் இடை யருது நிற்கும் கிலேகளில் மட்டுமே இயலும் , தமிழகத்து வயல்கள் என்றும் நீர் வற்றியதில்லை. அதனல், அவ் வயல்கள், நெல் விளேயும் நன்செயாகி டிேய பயன்தந்த தோடு, மீன் வளர்க்கும் பண்ணையாகவும் பயன் உற்றன். ஒரு வயலில் நெற்பயிர் அறுக்கப்பட்டுவிட்டது. அறுத்த கிலத்தை மீண்டும் ஆழ உழுது நெல் விளக்க எண்ணி ன்ை, அங்கிலத்திற்குரிய உழவன். ஒருநாள், அரிதாள்

1. நற்றிணை : 340. நக்கீரர். - செழியன்-பாண்டியன். படிை-தோண்டிய கால் அனேந்து-கால் வாயை அடைந்து. எதிரிய-திரும்பிய கண-பெரிய கோடு.கொம்பு அள்ளல்-சேறு. அம்-அழகிய உள்வாய்-உள்ளே. பகடு-எருது. செஞ்

சால் உழவர்-ஆழமாகப் பலசால் ஒட்டும் உழவர். கோல்புடை-கோலால் அடித்தல். மதரி-தப்பிச் செருக்குற்று. டைங்கால்-நீர்மிக்க அண-வரப்பு.