பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வயல் நிலம் 95

ஒரு பொய்கையின் நீர் வளத்தை விளக்க அல்லித் துணையை நாடியுள்ளார். -

பிடியானேயின் காதுகள்போல் பரந்த பெரிய பசிய இலைகள்; நீர் கிலக்கண், உறுபீன் நாடி நிற்கும் கொக்கின் கூம்பிய கிலேயினே கினேப்பூட்டும் அரும்புகள் ; விடியற் காலேயில் எழுந்து செல்லும் வயல் உழு உழவர், கண்டு மகிழுமாறு, பேரொளி பரவக் கீழ்த்திசையில் தோன்றும் விடிவெள்ளியைப் போல், வெண்மை நிறம் விளங்க, மலர்ந்து மணம் வீசும் மலர் ஆகியவற்றால் அழகுடைய வாய்த் தோன்றும் அல்லிக் குளம் எனப் பாடிப் பாராட் டிர்ை அப் புலவர். அம்மட்டோ ! உழவர் நாள்தோறும் கண்டு மகிழும் கூம்பிய கொக்குகளேயும், விடிவெள்ளி யையும் உவமை காட்டி விளக்கி வயலின் நீர் வளத்தை, அவ்வயலுக்கு நீர்தரும் பொய்கையின் நீர்வளத்தைப் போற்றிப் புகழ்ந்துள்ளார். அப் புலவர்.

முயப்பிடிச் செவியின் அன்ன பாசடைக், கயக்கண் அம் கொக்கின் கூம்புமுகை அன்ன கணக்கால் ஆம்பல் அமிழ்து காறு தண் போது, குணக்குத் தோன்றும் வெள்ளியின் இருள்கெடவிரியும் கயல்கணம் கலித்த பொய்கை.” 1

நெல் மலை :

நிலவளமும் நீர்வளமும் ஒருங்கே வாய்க்குமிடத்தில், நெல் வளமும் நிறையும் எனக் கூறவேண்டியதில்லை. தமிழ்

1. நற்றிணை 230. ஆலங்குடி வங்களுர், முயப்பிடி- நெருங்கிய பிடியானே. பாசடை-பசிய இலை, கயக்கண்.

குளத்தின்கண். கூம்பு முகை-மலராத அரும்பு. கொக்கின் அன்ன கூம்பு

முகை என மாற்றுக. கணே-பருத்த. கால்-தண்டு. அமிழ்து-தேன் போது-மலரும் பருவத்தில் உள்ள அரும்பு. குணக்கு-கிழக்கு. கயல் கணம்-கயல் மீன்கூட்டம். கலித்த-மிக்க, -