பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வயல் நிலம் 97

ஆடு, தான் மடிந்து மக்கள் உயிரோம்பும் உயிரினம். மருத நிலத்து எருதும் எருமையும், ஆவும் ஆன்கன்றும் அவ்விரு இயல்பிற்கும் மாறுபட்டனவாம். பால் முதலாம் தம் பயன் அளித்தும், உழுதொழிற்கு உற்ற துணையாய் கின்றும் அங்கிலத்து மக்களுக்குத் துணேபுரிவன அவை: பாலும் செய்யும் உணவாய் உடல் ஒம்புவதாலும், உணவுப் பொருள் அளிக்கும் உழுதொழில் நடைபெறப் பெருக் அணே புரிவதாலும் மருதநிலத்து மக்கள், அவற்றைத் தம் செல்வமென மதித்துச் சிறப்புச் செய்தனர். தம்தம் குடும்ப அளவிற்கு ஏற்றவாறு, அவற்றைப் பெரிய அளவிலோ, சிறிய அளவிலோ பெற்றுப் போற்றினர். பழங்கால மக்களின் செல்வ நிலையை மதிப்பிட்ட அறி ஞர்கள், ஆனிரைகளேயே மதிப்பீட்டளவாக மேற்கொண்

t- tfr . ‘.

எருமைக் கன்றுகளே எண்ணற்றனவாகக் கொண் டமையால் செல்வத்தில் சிறக்கும் வீடு ஒன்றைக் கண்ட ஒரு புலவர், நீண்ட பெரிய கொம்புகளேக் கொண்ட எருமையின் இளங் கன்றுகள், துண்தோறும் கட்டப் பெற்றுக் காட்சியளிக்கும் கவின்மிக்க நல்ல வீடு என்று பாராட்டினர்.

‘ தடமருப்பு எருமை மடகடைக் குழவி

தூண் தொறும் யாத்த காண்தகு கல்இல்.” 1

தமிழ்நாட்டுச் சிற்றுாரைச் சேர்ந்த ஒரு வீட்டில், எருமையின், பெரிய காதுகளேயுடைய இளங் கன்று, மலர் தரும் மலர்த் தாதுக்களும் உதிர்ந்து எருவாகிக் கிடக்கும் தொழுவத்தில் துயில் கொண்டுக் கிடந்தது. அவ் வீட்டின் வளம் கண்டு வாழ்த்தினர் மற்றாெரு புலவர் :

1. நற்றிணை 120. மாங்குடிகிழார். தடம்-பெரிய யாத்த-கட்டிய