பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 நற்றிணை

‘ இரும்புனிற்று எருமைப் பெருஞ்செவிக் குழவி

பைங்தாது எருவின் வைகுதுயில் மடியும்

செழுங்தண் மனே.” 1 உழுது ஓய்வுகொள்ளும் எருமை :

பருத்து வளேந்த கோடுகளேயும், கறுத்துத் திரண்ட கழுத்தினேயும் உடைய எருமைக் கடாவொன்று, நாட் காலையில் சென்று நீண்ட நேரம் உழுதது. அதனல் மிகவும் தளர்ந்துபோன அது, அத்தளர்ச்சி போக, அருகேயுள்ள பொய்கையில் துடும் எனும் பேரொலி எழப் பாய்ந்து நீந்திற்று. அந் நீர்நிலையின் கரையில் இருந்து, மீன் தேடி உண்டு வாழ்ந்த, நாரை கொக்கு போன்ற பறவையினங்கள், அவ் வெருமைக்கு அஞ்சி, அவ்விடம் விட்டுப் பறந்து ஓடின. நீரில் கெடிது நேரம் ஆடிய எருமை, பின்னர் மெதுவாகக் கரைஏறி, அப்பொய்கையை அடுத்து இருந்த மருதமரத்தடியில், இருளோ என எண்ணுமாறு பெருநிழல் செய்யும் அதன் கிளேகளின் நிழலில் கிடந்து உறக்கம் கொண்டது.

‘ தடமருப்பு எருமைப் பிறழ்சுவல் இரும் போத்து

மடகடை காரைப் பல்இனம் இரிய,

நெடுநீர்த் தண்கயம் துடும்எனப் பாய்ந்து

நாள்தொழில் வருத்தம் வீடச், சேட்சினை

இருள்புனே மருதின் இன்கிழல் வதியும்

F.” 2

யாணர் ஊர்.’

1. நற்றிணை: 271. - இரும்-கரிய, புனிறு-அண்ம்ையில் மகவு ஈன்ற பைந்தாது-மலரின் மகரந்தம். வைகுதுயில் - பெருந்துக்கம். மடியும் - மேற்கொள்ளும். செழுமை-வளம். -

2. நற்றிணை : 830. ஆலங்குடிவங்களுர். த.--பெரிய மருப்பு-கொம்பு, பிறழ்-வலிமை. சுவல்-கழுத்து. இரும்-கரிய போத்து-கடா. பல் இளம்பறவைக் கூட்டம். இரிய-பறந்து ஓடுமாறு. கயம் - குளம். நாள்தொழில் - விடியற்காலம் முதலாக மேற் கொண்ட உழுதொழில். வீட-நீங்குமாறு. சேட்சினே-நீண்ட கிளே. இருள் புனே-இருளை நிகர்க்கும். யாணர்-புது வருவாய், -