பக்கம்:இலக்கியப் புதையல்-1 நற்றிணை விருந்து.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வயல் நிலம் 99

சோலைக் குயில் :

இளவேனிற் காலம், உழவுத்தொழில் ஒழிந்த காலம்; தொழில் இன்றி ஓய்வுகொண்டிருக்கும் மக்கள், தம் மக்களுக்கு மணம் செய்தும், கடவுளர்க்கு விழாக் கண்டும் களிக்கும் காலம், அவ்விளவேனிற் காலம். அக் காலத் தில் அவர் காண்பனவும், கேட்பனவும் எல்லாமே இன்பம் தரும். சோலைகள் புதிய தளிர் ஈன்று, பூத்துக் கிடக்க, அச் சோலேயில் இருந்து குயில்கள் கூவக், கேட்பார்க்குப் பேரின்பமாம். காதலனும் காதலியுமாய்க் கூடி வாழும் இளங் காதலர்க்குக், குயிலின் குரல், மக்காள் மண் ஆணுலக வாழ்வு கிலேயற்றது ; சூதாடு கருவி, உருட்டுக் தோறும் மாறிமாறி உருள்வதுபோல், கிலேயற்று அழிந்து போகும் இயல்புடையது. அத்தகைய வாழ்வைப் பெற வேண்டி, மனங்கொண்ட மனேவியரை மறந்து பொருள் தேடிப் போவதைக் கைவிட்டு வாழுங்கள்; கிலேயற்ற இவ் லுலகத்தில், வாழக்கிடைத்த அந்நாளே மனேவியோடிருந்து மகிழ்ந்து கழியுங்கள் ‘ எனக் கூறுவது போல் தோன்றி அவர்க்குப் பேரின்பம் தரும்; அக்குயிலின் குரல் கேட்டுக் கேட்டு, உள்ளம் இன் பவுணர்வுகளால் துள்ள வாழ்ந்திருந் தனர் பழந்தமிழ் மக்கள் :

பொதும்புதோ றல்கும் பூங்கண் இருங்குயில்

கவறு பெயர்த்தன்ன கில்லா வாழ்க்கை இட்டு அகறல் ஒம்புமின்! அறிவுடையீர்!’ எனக் கையறத் துறப்போர்க் கழறுவ போல மெய்யுற இருந்து மேவர நுவல.” 1

1. நற்றினே : 243. காமக்கணிப்பசலையார். - பொதும்பு-சோலை. அல்கு-தங்கும். பூங்கண்-அழகிய கண். இருங் குயில்-கரிய கு பில். கவறு-சூதாடு கருவி. கையற-செயலற. துறப்போர்கைவிட்டுப்போவார். கழறுதல்-இடித்து அறிவுரைத்தல். மெய்புற-ஆணும் பெண்ணுமாய்க் கூடி இருந்து. மேவர-பொருந்துமாறு,