பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82


யாகவும் நானே காட்டப்படுவதால் இயற்கையில் மென்மை எனது பிறப்புரிமை என்பதை உணரவேண்டும். அஃது என்ன பிறப்புரிமை? எனது பிறப்பு முதல் இறப்பு வரை என்னுடன் இணைந்து நிற்பது மென்மை. பிறவற்றின் மென்மை இடம் மாறலாம்; தடம் பிறழலாம். எனது தோற்ற நிலை முதல் ஈற்று நிலை வரை ஒவ்வொரு வளர்ச்சி நிலையிலும் மென்மை என்னுடன் ஒட்டி இழைந்து நிற்பது. இதனைக் காட்டும் இலக்கிய அடுக்கு இதோ : 'மீன்கண்டன்ன மெல் அரும்பு ஊழ்த்த'8 ே "மென் முகை' - குறுந்தொகை 234. "மென் பொகுட்டு’ - பரிபாடல் : 11 "மெல் இதழ்’ - நற்றினை : 18. மென் தோடு' - நற்றிணை 400 மென் மலர்' - கலித்தொகை : 1.03. "மென்பதப் புது வி’ - அகநானூறு : 74. "மென்பூஞ் செம்மல்" - மதுரைக் காஞ்சி : 685. :மென் பூ வாகை' - அகநானூறு : 136. 'நன்னர் மெல் இணர்' - மலைபடுகடாம் : 428. மென்மையிலும் நொய்மை 'துய் எனப்படும். பஞ்சினும் மென்மை துய் என்பது. இந்தத் துய்’யும் எனக்குரியது. காண்க : 'துய்ம் மலர் உதிர' - குறுந்தொகை : 1.10. 'துய் வி வாகை' - பதிற்றுப்பத்து : 43, யாவற்றிற்கும் மேலாக எனது மென்மைக்கு மணிமுடி இறைவனால் கிடைக்கின்றது. இறைவன் எட்டு குணங்களின் கூட்டு உருவகம், அதனால் 'எண் குணத்தான்' எனப்பட்டான். எண் குணங்களுள் ஒன்று மென்மைத் தன்மை. அம்மென்மையான எனது இதழ்களின்மேல் அடிவைத்து நடப்பதால் : மலர்மிசை ஏகினான் மாணடி" - (குறள் : 3) 88 அகம்: 10 : 2