பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93

 'தேனெய்ப் புளிப்பிற் சுவை இன்னா'128 -என்றனர். என்னில் இனிப்புச் சுவை என்னிடம் ஊறும் தேனில் மட்டுமன்று நானே இனிப்பேன். 'ஆலையில்லா ஊ ரு க் கு இலுப்பைப் பூ சருக்கரை' என்னும் பழமொழியை அறிவீர்களே! ஆம், இலுப்பைப் பூ இனிப்பானது. அறுசுவைகளில் பிறவற்றில் புளிப்பைப் புளியம் பூவில் சுவைக்கலாம். வேப்பம்பூவில் கசப்பைக் காணலாம். மகிழம் பூ துவர்க்கும். துவர்ப்புச் சுவைகொண்ட இலவம் பூவிற்குத் துவரி என்றே பெயர். மிளகுப் பூ காரம் காட்டும். உப்பங்கழி நிலத்தில் தோன்றும் தண்டுபோன்ற பூடு ஒன்று உவர்ப்பை வழங்கும். நாச்சுவை ஆறுக்கும் நான் நிற்பது போன்று செவிச்சுவை ஒன்பதிற்கும் என்னைக் கொள்வர், ஒரு சான்று சொல்வேன்: இராமன் அயோத்தி நகரை நீங்கியபோது, 'அன்றலர்ந்த பூவும் அழுதவாம்.'12 -கம்பர் என்னை அவலச் சுவையில் காட்டுகின்றார். சுவைத்தேனிலிருந்து என்னைப் பிரிக்காமல், "தேனப்பூ" என்றும் "தேனணி மலர்' என்றும், "துவர்ப் பூ ” என்றும், "சுவைப் பூ' என்றும் புலவர் பெருமக்கள் சொல்லிச் சுவைத்தனர். எனது வண்ணங்கள் மெருகேறிப் பள பளப் 7 ஒளி: பதே எனது ஒளி. அஃது எனக்கொரு சிறப்பு. சிறப்பு அச்சிறப்பு என்னால் மறக்க முடியாததுதான். அதனால்தான், ‘'தேனை மறந்திருக்கும் வண்டும்-ஒளிச் சிறப்பை மற்ந்துவிட்ட பூவும் இந்த வையம் முழுதும் இல்லே'130 -என்று கண்ணனைக் காதலித்த பாரதியார் பாடினார். அவரே அவனைக் காதலியாக்கிக் காணும் போதும் அவளது புன்னகையை, 128 இன்னா நா : 28 129 கம்ப. . நகர் நீங்கு படலம் : 1.02. 180 கண். பா. 14 : 5.