பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

155

量競 ; : . இவ்வாறு வாழ்த்துவதற்கெல்லாம் முல்லைமலர் நெல்லொடு கொள்ளப்படும் மரபு, தமிழர் தம் தனிமரபு. நாள்தோறும் அந்தி மாலையில் இல்லத்தை மங்கல மாக்குவர். 'அகநகர் (இல்லம்) எல்லாம் அரும்பவிழ் முல்லை நிகர் மலர் நெல்லொடு தூஉய்ப் பகல்மாய்ந்த மாலை மணி விளக்கம் காட்டி' யதில் நெல்லொடு முல்லை தூவப்பட்டதையும் காணலாம் இவ்வடிகளில் 'நிகர் κρών ή ** என்பது "கற்பிற்கு நிகரான மலர்' என்னும் பொருள் கொண்டது. - திருமணம் நிறைவேறியதும், 'சின் மலர் கொடு துரவி மங்கல நல்லமளி'2 -ஏற்றுவர். ஆம், முதல் இரவு. இதனை 'அகநானூறு' 'தலைநாள் இரவு' என்று குறிக்கும். படுக்கை அறை முல்லையால் ஒப்பனையாகும். படுக்கையும், 'முல்லைப் பல்போது உறழப் பூ நிரைத்து மெல்லி தின் விரிந்த சேக்கை” யாகும். இதனைப் பாடியவர் பெயரும் முல்லை. அத்துடன் காவல் புரியும் உரிமை யும் கலந்து கொண்டது. அவரது பெயர் "காவல் முல்லைப் பூதனார்’ என்பது. ('காவல் முல்லை என்னும் புறத்துறைப் பாடல்களைப் பாடியதால் பெற்ற பெயர் இது,) 5) ಕೆಗೆಝ ஏளனச் சிரிப்பும் முல்லை பிறந்த இடம் கொடி. பிறந்த காலம் கார்ப் பருவம். நேரம் மாலைப் பொழுது. "காரும் மாலையும் முல்லை' என்பது தொல்காப்பியம். இது பொதுவாக முல்லைத் திணைக்கு வகுக்கப் பட்டதென்றாலும் முல்லையின் மலர்ச்சியால் இதற்கும் இயைபு உண்டு. 1. சிலம்பு : 9 : 1-3 8 நெடு. வi: 180, 181 2 சிலம்பு : 1. 6 2。 4 தொல்: பொருள் : 6