பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

169


ஆனால், தமிழகத்தில் வந்தே றிகள் தாம் சாதிப் பாகுபாட்டையும் அதில் உயர்வு தாழ்வையும் படைத்து மொழிந் தனர். அன்னார் தாமே உயர்ந்தோர் என்பதைப் பல்வகையாலும் நாட்டுவதில் பல முறைகளையும், தேர்ந்த வஞ்ச உத்திகளையும் கையாண்டனர். அவற்றுள் ஒன்று. நாட்டில் பெருமைக்குரிய தாகக் கொள்ளப்படும் எதையும் தமக்குரியதாகக் காட்டிக் கொள்ளல். இஃது அவர்களது வாடிக்கை. அவர்க்கு வாய்பிளந்த தமிழரிற் பலரும் தலையசைத்துத் தாளம் போட்டனர். இந்த அரங்கேற்றத்தில் முல்லையும் ஒர் அரங்கத்தில் ஏற்றப்பட்டது. நான்கு சாதிக்கும் உரிய மலர்களாக நான்கு மலர்களைக் குறித்து எவரோ ஒருவர் கருத்தறிவித்தார். அவரோ, அதனை ஏற்றவரோ இலக்கியமும் ஆக்கினர். 'முல்லை அந்தனர்; குறிஞ்சி அரசன்; மல்லல் மருதம் வாணிக னென்ப; நெய்தல் சூத்திரன்; நினையுங் காலைப் பல்குலம் என்ப பாலை யானே” இப்பாடல் யாப்பருங்கல விருத்தியில் சான்றுக்குக் காட்டப்பட்டுள்ளது. இதில் அமைந்த ‘சூத்திரன்' என்ற சொல் இப்பாடல் முற்காலப் பாடல் அன்று என்பதைக் காட்டிக்கொடுக்கின்றது. முற்காலம் முதல் கால மெல்லாம் இந்த வேலை நடந்து வந்திருப்பதையும் அதனைத் தமிழ்ப் புலவர்களும் ஏற்று எடுத்துக்காட்டுக்குக் கொண்டதையும் எண்ணுங்கால் தமிழகத்தின் கால நிலையைப் புரிந்துகொள்ள முடிகின்றது. புலவர் மன்னரை நாத்தழும்பு ஏறப் பாடியே பரிசில்பெறுவர் முல்லைப் பூவைப்பெற்ற கொடி. 'நாத்தழும்பு ஏறப் பாடாமலே' தேரைப் பரிசிலாகப் பெற்றதை அறிவோம். வேள்பாரி இம் முல்லைக்குத் தேரை வழங்கியதால் கடையெழுவள்ளல்களிலே ஒருவன் ஆனான். இது அவனுக்கு முல்லை வழங்கிய பரிசு இசை நட்ட இசை முல்லை இசைக்கு மூலம் இசைக்கருவி. இசைக் கருவியில் மூலம் குழல். அதில் எழுந்த இயற்கை ஒலியே இசையாகப் பிறப் 1 யாப். வி : ஒழிபியல் நூற்பா 2 எடுத்துக்காட்டு.