பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

197


கொண்டு எந்த அளவில் இம்மலர்கள் விளைந்தன என அறிய லாம். இக்குடும்பப் பூக்கள் நான்கையும் கலந்து தொடுக்கும் மாலை களும் அமைந்தன. 'அரிநீர் அவிழ்நீலம் அல்லி அனிச்சம் புரிநெகிழ் முல்லை நறவோ டமைந்த தெரிமலர்க் கண்ணியும் தாரும் தயந்தா” ராகப் பலமலர்க் கலம்பகத்தையும் அணிந்தனர். மிகப் பரவலாக உழத்தியர், நெய்தல், ஆம்பல், இருவகைக் குவளை, காவி ஆகிய நான்கையும் தனித்தனியாகவும், யாவற்றை யும் சேர்த்துக் கட்டிய மாலையாகவும், தழைஉடையாகவும் அணிந் தனர். - மாந்தர் தாம் விரும்பியதைக் கடவுளர்க்கும் ஆக்குவர் அன்றோ? இம்மலர்கள் யாவும் கடவுளர்க்கும் ஆயின. "ஆம்பல் மலர்கொண்டு அணிந்தாய் போற்றி' எனத் தனி மலர் சூடப்பட்டமை அறியலாம். செங்கழுநீர், செங்குமுதம் இவற்றின் இதழ்களைக் கிள்ளி எடுத்து மாலையாக்கி அணிவித்து வழிபட்டனர். முருகனுக்கு, "பைந்தாட் குவளை துரவிதழ் கிள்ளி'த்2 -தலையில் அணிவிக்கும் 'தெய்வ உத்தி' என்னும் அணிகலனுடனும் வலம்புரி யுடனும் வைத்ததைத் திருமுருகாற்றுப்படை காட்டுகின்றது. குவளை மலரைப் பிளவு செய்து பிணையலாக்கியதை அப்பர் பாடியுள்ளார். கடவுளர் போற்றிக்குரிய மலர்கள் எட்டில் நிலம் ஒன்றாக அமைந்தது. - - சூடியும் அணிந்தும் மகிழ்ந்தமை போன்று கையிற் பிடித்தும் களித்தனர். சிவகன், - - "செறிந்த கழுநீர்ப் பூப்பிடித்துச் சேக்கை மரீஇய சிங்கம் போல்' -செம்மாந்திருந் கவி : 91 : 1 - 8. 8 சிவ. சி : 2358 2 திருமுருகு ; 22 •