பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

205


முத்தாம்பல்” என்று பண்ணுக்குச் சொல்லுவர். இது சிலப்பதிகார அரும்பதவுரையாசிரியர் விளக்கம். இசைக்கருவி, தமிழில் தனிச்சொல்லாக 'இயம்' எனப்படும். அதனை இயக்குபவர் இயவர்' எனப்படுவர். “. ... ... ...இபவர் தீங்குழல் ஆம்பலின்' -என்று ஆம்பல் பெயர்பெற்ற குழல் இசைக்கப்படுவதை ஐங்குறுநூறு காட்டுகின்றது. "ஆம்பலத் தீங்குழல் கேளாமோ தோழி'2 -என்று அக் குழல் ஒசையைக் கேட்பாரைச் சிலம்பு காட்டுகின்றது. இக்குழல் முல்லைக் குழல் போன்று ஆம்பல் வடிவ இணைப்பு பெற்றதால் பெற்ற பெயர். வெண்கலத்தால் ஆம்பல் முகை வடிவாகச் செய்து அதனைப் புல்லாங்குழலின் வளைப்பக்கத்தே பொருத்தி யிருப்பர். இதனை, "கஞ்சத்தால் குமுத வடிவாக அணைக பண்ணிச் செறித்தலின் ஆம்பற் குழலாயிற்று'8 -என்னும் அடியார்க்கு நல்லார் உரையால் அறியலாம். இக்குழலில் இசைக்கப் படுவது ஆம்பற்பண் என்பதை, "ஆம்பல் என்னும் பண்ணினையுடைய அழகிய இனிய குழலிடத்துத் தெளித்த ஓசை’4 என்று நச்சினார்க்கினியர் விளக்கினார். இக்குழல் இசையை இடையர் பலகாலும் எழுப்புவர் என்பதை, ஆம்பலத் தீங்குழல் தெள்விளி பயிற்ற" என்றார் கபிலர். இது மாலைக்காலத்தில் ஊதப்படும். இவ்விசையைப் போன்று வண்டு இசைக்கும் என்பதால் வண்டின் இசைபோன்று இனிமை யுடையது என்று அறியலாம். இவ்விசை இரங்கி ஒலிப்பது ஏங்கி அழுவது போன்றதற்கு உவமையாக, "இம்மென் பெருங்களத்து இயவர் ஊதும் ஆம்பல் குழலின் ஏங்கி (அழுதாள்)'6 -என நற்றிணை 1 ஐங் ; 215 > 5 குறி. ur : 222 2, 3 சிலம்பு : 17: 19 உரை 6 நறி : 118 : 11 . 4 குறி. பா 222உரை. - - х