பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/274

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238


கூர்மையான ஊசி ஒன்றை அவ் ഖാ வைத்து அழுத்த வேண்டும்; - நூறு இதழ்களில் முதல் ஒர் இதழில் ஊன்றும் நேரம் ஒரு கணமாம். இதனை, "தூற்றிதழ் அடுக்கி ஒரிதழ் அதனில் துன்னுரசி ஊன்றிடுங் காலம் கனமாம்" என்றார். இவ்வாறு காலப் பெருமைக்கும், நேரச் சிறுமைக்கும் எல்லைகாட்டும் பாங்கைக் கொண்டது தாமரைமலர். இறைக்க இறைக்க ஊறும் ஊற்று போன்று எழுத எழுத எழுவது தாமரை மலர்க் கருத்து. எங்கேனும் நிறைவு செய்ய வேண்டு மன்றோ? இங்கு ஒரு குறைகாட்டி அக்குறையே நிறையாக நி ைற வு செய்யலாம், முறையாகப் பார்த்தால் மருத நிலத்திற் சிறந்த மலர் தாமரைதான். ஆனால், அந்நிலம் மருத மரத்துப் பூவின் பெயரால் 'மருதம்’ என்று பெயர் பெற்றது. ஆனால், மருத மரத் திற்குரிய பூக்களைக் குறித்தோர் எவரும் மருதப் பூவைச் சொல்ல வில்லை. தாமரையையும் குவளையையும் காட்டினர். ஆனாலும் குறியீடாக மருத மலரே கொள்ளப்பட்டது. இது தாமரைக்கு ஒரு குறையாகப் படுகின்றது. இது குறைதானா? Aar எந்நிலத்துத் தெய்வமாகவும் கொள்ளப்படவில்லை யாயினும் அனைத்து நிலத்திற்கும் பொதுவாக விளங்கியமை போன்று தாமரையும் சிறப்பாக அமைந்து குறையை நீக்கியது குறையிலும் நிறைபெறும் தாமரை பெருமையின் எல்லை வரை நிற்கும் . - தெய்வ ίDoυή 1. பழம்பர்டல்-அரபத்த நாவலர் பரதநூல்