பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/292

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256


ஆனால், அடுத்து எழுந்த இலக்கண நூலார் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் தனித்தனியே கொண்டனர். இவ்வகையில் புறத் திணை பன்னிரண்டு ஆயிற்று. தொல்காப்பியத்திற்கும்பின்வந்த நூல்களுக்கும் புறத்தினை அளவில் வேறுபாடுகள் நேர்ந்தன. எண்ணிக்கை பெருகிய வேறுபாடு; முறைவைப்பில் வேறுபாடு (உழிஞை, நொச்சியில்): திணை ஒழுக்கத்தில் வேறுபாடு (காஞ்சித் திணை) என வேறு பாடுகள் பெருகின. ஆயினும் ஒன்றில் மட்டும் யாவும் ஒருங்கு ஒத்துப்போயின. அதுதான் பூக்களைக் கொண்டமை. ിഞ്ഞ സ്ത് கட்குப் பூக்களைக் கொண்ட வகையில் காஞ்சி ஒன்று தவிர ஒரே நிலை கொள்ளப்பட்டது. காஞ்சியும் திணை ஒழுக்கத்தில் மட்டும் வேறுபட்டது. அதிலும் காஞ்சியைச் சூடுவதைத் தொல்காப்பியம் காட்டாது போயினும் அதன்வழி எழுந்த இலக்கியங்கள் காஞ்சிப் பூ சூடியதைப் பேசின. . யாவற்றையும் ஒருங்கெண்ணி ஒத்து நிற்கும் பாங்கோடு பட்டியலிட்டால் பின்வருமாறு புற ஒழுக்கங்களும் அவற்றிற்குரிய பூக்களும் அமையும்: ஒழுக்கம் ஆ திணை நிகழ்ச்சி சூடும் பூ வெட்சி ஆநிரைகளைக் கவர்தல் வெட்சிப் பூ கரந்தை ஆநிரைகளைக் மீட்டல் கரந்தைப் பூ வஞ்சி போருக்கு முனைந்து எழுதல் வஞ்சிப் பூ காஞ்சி தாக்கியோரை எதிர்த்தல் காஞ்சிப் பூ உழிஞை முற்றுகையிடல் உழிஞைப் பூ நொச்சி முற்றுகையைத் தகர்த்தல் நொச்சிப் பூ தும்பை கைகலந்து போரிடல் தும்பைப் பூ ፴፱፻፴፮) & வெற்றி - *... . வாகைப் பூ இவ்வாறு புறத்திணையில் எட்டுப் பூக்கள் நீங்கா இடம் பெற்றன. அகத்தில் அவ்வந்நிலத்திற் சிறந்த பூக்களைப் பெயர்க்குறி -ra கொண்டது போன்றே, புறத்திற்கும் இயைபு பார்த்தே அமைத்திருப்பர். பளிச்சிடும் நிறம், பரவலாகக் கிடைப்பவை,