பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/302

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266


இப்புறப்பூக்கள் தனிப் பூவாகவும் சூடப்படும். கொத் தாகவும் சூடப்படும். தழையோடும் கொடியோடும் சூடப்படும். இவற்றை வீரர்படை குடிச் செல்லும்போது தொலைவிலிருந்து நோக்கினாலும் அறிந்துகொள்ளும் அளவில் பெரும் பரப்பாகக் காட்சியளிக்கும். ஆநிரைகளைக் கவரும் வீரர் வெட்சிப் பூவைச் சூடிச் செல்கின்றனர். அத்தோற்றத்தை, - "வெவ்வாள் மறவர் மிலைச்சிய வெட்சியால் செவ்வானம் செல்வதுபோல் செல்கின்றார்' எனப் பெரும் பொருள்விளக்கப் பாடல் குறிக்கின்றது. இதனால் வெட்சியின் பளிச்சிடும் செம்மையையும் பெரும்பரப்பையும் ஒரே சீரான தோற்றத்தையும் அறிய முடிகின்றது. இதுபோன்றே பிற பூக்களும் சூடப்பட்டுக் காட்சி தரும்; அறிவிப்பையும் தரும். பூக்களின் உலகத்தில் புறப் பூக்கள் பெற்ற தகுதி குறிப்பிடத்தக்கது.இத்தகுதி பெற்ற ஒவ்வொரு பூவைப்பற்றியும் விவரமாக அறிதல் நலம். கவரும் மலர் வெட்சி இனமும் மணமும் வெட்சிப் பூவால் பெயர்பெற்றது வெட்சித் திணை. பகை நாட்டாரது ஆநிரைகளைக் கவரப் போகும்போது அ.த ன் அடையாளமாக இப்பூவைச் சூடுவர். இப்படை வீரர் வெட்சியார் .எனப்பட்டனர். 'வெட்சிக் கானத்து வேட்டுவர் ஆட்ட'2 "கடத்திற் கலித்த முடச்சினை வெட்சி-3 - என்னும் சங்கச் பெரும்பொருள் விளக்கம் (புறத்திரட்டு :152) . புறம் 202:1. 3 குறு : 209, 5.