பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/316

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280


பொருளை, அதனிலும் நிலையாமைப் பொருளை அமைத்தார். வஞ்சியாரை எதிர்த்து ஊன்றுவதற்கும் இடம் தந்தார். புற இலக்கியங்களிலும் பிற்கால இலக்கணங்களிலும் இரண்டிற்கும் இடங்கள் அமைந்தன. காஞ்சி சூடிக் கடிமனை கருதி’யது என்பது காஞ்சி சூடிய எதிர்த்தாக்குதல். கைவிடமுடியாப் போர் மூள்வதும், அப்போரினால் அவலம் நேர்வதும் ஆகிய இரண்டும் உள்ளமையால் காஞ்சிக்கு இரண்டும் பொருத்தமாயின. காஞ்சி சான்ற செருப்பல செய்து” என்று பாடிக் காஞ்சிப் பூச் சூடிய போர் என்றும், காஞ்சிப் பூச் சூடாது நிலையாமை பொருந்திய என்றும் இருபொருளும் பொதிய வைத்தார் பெருங்குன்றுார்கிழார். இப் பூவைத்தரும் காஞ்சி ஒரு மரம். "முடக் காஞ்சிச் செம்மருதின்'8 குறுங்காற் காஞ்சிக் கொம்பர் ஏறி' என்றபடி இம் மரம் குட்டையான அடிப்பகுதியைக் கொண்டது; வளைந்த கிளை களை உடையது. நீர்த்துறைகளில் தழைத்து வளரும் "நீர்த் தாழ்ந்து குறுங்காஞ்சி"யின் (புறம் 18 - 7.8 ) பூக்களை மீன் கல்வித் தின்னும் வயற்புறங்களிலும் வளரும். இம்மரம் இலக்கியங் களில் மருத மரத்துடன் சேர்த்துப் பேசப்படும். மருதோடு நின்று வளர்வது. எனவே, இப் பூ மருத நிலப் பூ. தனது தலைவனது ஊர் வளத்தைப் பாராட்டும் ஒரு தலைவி அவ்வளத்தின் ஒர் அறிகுறியாக நனைய காஞ்சி*5 ஒன்றாள். காஞ்சி அரும்புகள் செறிந்து தழைத்த காஞ்சி, தோற்றத்தில் கவர்ச்சியைத் தருவது. இம்மலர் இம்மரக் கிளை களில் செறிந்து கீழ்நோக்கித் தொங்கும். எனவே, புற. வெ. மா : சஞ்சி : கொளு பதி 1 : 84 : 19 பொருதர் : 1.89' சிறுபான் : 179 ஜங் : 1. хх