பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/325

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

289


யுள்ளார். இப்பாட்டில் புறப்பூக்களில் உழிஞை ஒன்று மட்டுமே இடம்பெறவில்லை. அதன் அமைதி கருதி நச்சர் எழுதினரோ? அவ்வாறாயின் உழிஞை என்றே எழுதியிருக்கலாம். எனவே, பூவின் அளவு வகையால் உழிஞை சிறுபூளை எனப்பட்டது. வீரர் உழிஞைப் போர்க்கு எழும் முனைப்பின்போது பாண் மகளிர் யாழை மீட்டிப் பாடித் தினவேற்றுவர். அப்பாடலைப் பாலைப் பண்ணிற் பாடுவர். அப்பாடல் முற்றுகையிடும் உழிஞைத் திணைக் கருத்து கொண்டதாகும் : "வண் பேடு கூந்தல் முடிபுனை மகளிர் தொடைபடு பேரியாழ் பாலை பண்ணிப் பணியா மரபின் உழிஞை பா'1 டியதாகப் பரணர் பாடினார். 'பணியா மரபின் உழிஞை' என்பது முற்றுகைக் கருத்திற்கு ஒரு பணியா மரபைக் காட்டுகின்றது. இப்பணியா மரபிற்கு உரிய பூ உழிஞைப் பூ. - உழிஞைப் பூ பணியாப் பூவாயினும் இதற்கும் பணியாமல் எதிர்த்து வரும் பூ இல்லாமலா போகும்? தகர்ப்பு மலர் நொச்சி முற்றுகையைத் தகர்த்து எழுந்தது நொச்சிப் பூ. தகர்த் தெழும் வீரர் நொச்சிப் பூவைச் சூடுவர். இதனாற் பெயர்பெற்றது நொச்சித் திணை. மயிற்காலும் நண்டுக் கண்ணும் நொச்சி மரவகையைச் சேர்ந்தது. இதில் கருநொச்சி, வெண்ணொச்சி, மலைநொச்சி என மூன்று வகை உண்டு. இவற்றில் எதன் பூவைப் பூவாகக் கொண்டனர்? இலக்கியமே விடை காட்டுகின்றது. 1 பதி. பத்து : 46 : 4-6, ,器 19