பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/362

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

326


பட்டதாகக் கூறுகின்றது. இந்நிகழ்ச்சியைத் திருநாவுக்கரையரும் திருநாவலூரரும்பாடியுள்ளனர். வழிபட்ட சண்டேசர் வழிபாட்டிற்கு உரிய மலர்களாக, "ஆத்தி மலரும் செழுந்தளிரின் முதலா அருகு வண்புரவில் பூத்த மலர்கள் தாம் தெரிந்து கொண்டார் - எனச் சேக்கிழார் பாடினார். இதனால் ஆத்திமரம் கடவுள் இடம்பெற்ற மரமாயிற்று. இதன் மலரும் வழிபாட்டிற்காயிற்று, கடவுள் தொடர்பு உடையவற்றிற்குத் திரு என்னும் அடை மொழி கொடுப்பது மரபு. திருக்கோவில், திருவிழா, திருச்சுற்று முதலிய வழக்குகள் உள்ளன. இம்மரபில் கடவுள் தொடர்பு கொண்ட ஆத்தி, திரு + ஆத்தி = திருவாத்தி ஆயிற்று. ஆத்தி, திருவாத்தி ஆனதன் மூல நிகழ்ச்சி இதுதான். - ஆனாலும், சேக்கிழார் இங்கு திருவாத்தி’ எனக் குறித்தா ரல்லர். பின்னர் சிறுத்தொண்டநாயனார் புராணத்தில் குறித்தார். திருசெங்காட்டாங்குடி சிறுத்தொண்டர் ஊர். சிறுத் தொண்டரை ஆட்கொள்ளச் சிவனடியார் வடிவில் சிவபெருமான் திரு.செங்காட்டாங்குடிக்கு வந்தார். தொண்டர் இல்லத்தில் இல்லா மையால் ‘யாம் சென்று இவ்வூர்க் கோவிலில் உள்ள ஆத்தி மரத்தின் கீழ் இருக்கின்றோம்; வந்தால் சொல்வீர், - எனச் சொல்லிச் சென்றார். இதனைச் சேக்கிழார். 'கண்ணுதலிற் காட்டாதார் 'கணபதீச் சரத்தின்கண் வண்ணமலர் ஆத்தியின் கிழ் இருக்கின்றோம்; மற்றவர்தாம் நண்ணினால் நாமிருந்த பரிசுரைப்பீர் என்றருளி அண்ணலார் திருவாத்தி அணைந்தருளி அமர்ந்திருந்தார்” - என்றார். இங்கு தான் திருவாத்தி என்னும் சொல்லாட்சியைக் காண்கின்றோம். . 哆 இப்பாட்டில் ஆத்தி இரண்டு இடங்களில் குறிக்கப் பட்டுள்ளது. ஓரிடத்தில் முன்னே வண்ணமலர் ஆத்தி' என்றும் பின்னே திருவாத்தி' என்றும்அமைக்கப்பட்டுள் ளது. முன்னுள்ள 1 Gur 93: 1, 2 . . . . . . 2 பெரிய பு: சிறுத்தொண்டர் 41,